[ad_1]





'சுற்றுச்சூழலையும் பாதுக்காக்கும் வகையில் போகிப் பண்டிகையைக் கொண்டாட பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்' என்று பெரம்பலூர் ஆட்சியர் சாந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.





இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழர்கள், அறுவடை நாளை பொங்கல் திருநாளாகத் தொன்றுதொட்டு கொண்டாடிவருகின்றனர். 'பழையன கழிதலும் புதியன புகுதலுமாக' தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். இந்நாளில், வீட்டிலுள்ள பழைய, வேண்டாத பொருள்களையும், செயற்கைப் பொருள்களான டயர்கள், பிளாஸ்டிக் போன்றவற்றையும் எரிப்பதும் ஓர் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப் புகைகளான கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, கந்தக டை ஆக்ஸைடு, டையாக்சின் இப்யூரான் போன்ற நச்சுக்களால், சுற்றுப்புற காற்றின் தன்மை மாசுபடுகிறது.மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சலும் ஏற்படும். ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகிறது. பார்க்கும் திறன் குறைபடுகிறது. இதுபோன்று காற்றைமாசுபடுத்தும் செயல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, போகிப் பண்டிகையன்று  பொருள்களை எரிக்காமல், முறைப்படி அகற்றி போகித்திருநாளை மாசில்லாமல் கொண்டாடுவதுடன் சுற்றுச்சூழலையும், உடல் நலத்தையும் பாதுகாக்க பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");