[ad_1]







இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணமடைந்த பிறகு, கொளத்தூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணி பொறுப்பை மீண்டும் முனிசேகர் ஏற்றுக்கொண்டார். 


சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்க, இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் மற்றும் போலீஸார் டிசம்பர் 8-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்றனர். டிசம்பர் 13-ம் தேதி, கொள்ளையன் நாதுராமைப் பிடிக்க முயன்றபோது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் மரணமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஜெய்த்ரன் போலீஸில் இன்ஸ்பெக்டர் முனிசேகர் புகார் கொடுத்தார். அதில், தன்னுடைய துப்பாக்கியைப் பறித்து கொள்ளையன் நாதுராம், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனைச் சுட்டுவிட்டதாகக் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் மாநில போலீஸார், பெரியபாண்டியனின் உடலைத் துளைத்தது இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கிக் குண்டு என்று தெரிவித்தனர். இதற்கிடையில், பெரியபாண்டியனின் மனைவி பானுரேகாவைச் சந்தித்த முனிசேகர், 'தவறு நடந்துவிட்டது' என்று கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டதாகத் தகவல் வெளியானது.



சில நாள்களுக்கு முன்பு கொள்ளையன் நாதுராம், ராஜஸ்தான் மாநில போலீஸாரிடம் பிடிப்பட்டான். அவனிடம் விசாரித்தபோது, 'நான் பெரியபாண்டியனைச் சுடவில்லை' என்று தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், பெரியபாண்டியனைச் சுட்டது யார் என்று விசாரிக்க, ராஜஸ்தான் மாநில போலீஸார் சென்னை வர உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், பெரியபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு, இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் தனிப்படை போலீஸார் பணிக்கு வராமல் இருந்துவந்தனர். கடந்த வாரத்தில் பணிக்குத் திரும்பியுள்ளனர்.


 சக போலீஸாரிடம் இன்ஸ்பெக்டர் முனிசேகர், "கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளை நடந்த பிறகு, குற்றவாளிகளைப் பிடிப்பதில் காலதாமதமானது. அப்போது, நகைக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால், கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டினர். கொள்ளையன் நாதுராமைப் பிடிக்க முயன்றபோது, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மரணமடைந்துவிட்டார். அவரது மரணம் எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. நகைக்கடை உரிமையாளர்கள் சேர்ந்து, பெரியபாண்டியன் குடும்பத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");