[ad_1]





இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மரபுகளை மீறி டெல்லி பாலம் விமான நிலையத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, அவரைக் கட்டியணைத்து வரவேற்றார். செவ்வாய்க்கிழமை பெஞ்சமின் நெதன்யாகு, சாரா தம்பதி தாஜ்மகாலைப் பார்வையிட்டு மகிழ்ந்தனர். இன்று குஜராத் மாநிலத்துக்கு நெதன்யாகு தம்பதி சென்றனர். அகமதாபாத்தில் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்ற பெஞ்சமின் நெதன்யாகு மகாத்மா காந்தி நிலைக்கு மரியாதை செலுத்தினார். 




அகமதாபாத்தில் icreate - மையத்தைப் பிரதமர் மோடியும் பெஞ்சமின் நெதன்யாகுவும் திறந்து வைத்தனர். விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ''இந்த மையத்தைக் கட்டத் தொடங்கும்போதே, இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்தை இங்கும் புகுத்த வேண்டுமென்று எண்ணினேன். தற்போது, அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. நான்கு நாள்களுக்கு முன் இஸ்ரோ 100வது செயற்கைக்கோளை ஏவியது. அர்ப்பணிப்பு உணர்வும் கடும் உழைப்பும் கொண்ட விஞ்ஞானிகளால்தான் இந்தச் சாதனை சாத்தியமானது. இஸ்ரேல் சிறிய நாடுதான். ஆனால், அந்த நாட்டின் தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் உலகை ஆள்கின்றன. பெரிய நாடுகள் அந்த நாட்டிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன'' என்றார்.

''நானும் இந்திய பிரதமர் மோடியும் தொழில்நுட்பரீதியாகவே சிந்திக்கிறோம். இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து பல்வேறு சாதனைகள் படைக்கும். இந்த உலகத்துக்கு ஐ-பேட் , ஐ-பாட் தெரியும். அவற்றைவிட ஐகிரியேட் மிக முக்கியமானது'' என்று கூறிய பெஞ்சமின் நெதன்யாகு,' ஜெய் ஹிந்த், ஜெய்பாரத், ஜெய் இஸ்ரேல் '' என்றவாறே பேச்சை நிறைவு செய்தார். 

அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ''இந்த ஆண்டுக்குள் டெல்அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு  இஸ்ரேல் தலைநகரம் மாற்றப்படும், முதல்கட்டமாக அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமுக்கு இடம் பெயரும். படிப்படியாக மற்ற நாடுகளும் தூதரகத்தை அங்கு மாற்றுவார்கள்'' என்றார். முன்னதாக, இஸ்ரேல் பிரதமருடன் கொண்டு வரப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஜீப், பனாஸ்காந்தா கிராமத்துக்கு வழங்கப்பட்டது.

பெஞ்சமின் நெதன்யாகு இந்திய வருகைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆஷிப், ``இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இந்தியா காஷ்மீரை ஆக்கிரமித்திருப்பதுபோல, இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவை'' என்று விமர்சித்துள்ளார். 



  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");