இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி), அதன் ஒட்டுமொத்த இழப்பை, ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்டில் இருக்கும் தொகையைக்கொண்டு ஈடுசெய்யத் திட்டமிட்டுள்ளது. அது என்ன ஷேர் பிரீமியம் அக்கவுன்ட்?ஒரு நிறுவனம், புதிதாகப் பங்கு வெளியிடும் போது, அதன் முக மதிப்பு மற்றும் பிரீமியம் மதிப்பில் பங்குகளை விற்பனை செய்யும். உதாரணமாக, பங்கு ஒன்றின் முகமதிப்பு ரூ.10. அந்தப் பங்கு ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டால், ரூ.30 என்பது பிரீமியம். இந்தத் தொகை அந்த நிறுவனத்தின் பேலன்ஸ்ஷீட்டில் தனியாக வைக்கப்படும்.   

ஐ.ஒ.பி வங்கியின் பங்கு பிரீமியத் தொகை சுமார் ரூ.7,650 கோடி. ஆனால், வங்கியின் மொத்த இழப்பு 31.03.2017-ன்படி ரூ.6,978 கோடி. இந்த  இழப்பைப் பங்கு பிரீமியத் தொகையைக் கொண்டு ஈடுகட்டப் போகிறது ஐ.ஓ.பி. இதற்கான ஒப்புதலைப் பங்குதாரர்களிடமிருந்து பெற, வரும் ஜனவரி 30 அன்று  சிறப்பு பொதுக் கூட்டத்தை நடத்தப்போகிறது ஐ.ஒ.பி.‘‘இப்படிச் செய்வதால் பங்குகளின் புத்தக மதிப்பு, நிகரச் சொத்து மதிப்பு, வங்கியின் பங்கு மூலதனக் கட்டமைப்பு, பங்குதாரர் முறை  என எதுவும் மாறாது.  வங்கியின் அளிக்கப்பட்ட பங்கு மூலதனம் குறையாது. பங்கு மூலதனத் தன்னிறைவு   விகிதங்கள் (Capital adequacy ratios)  பாதிக்கப்படாது. இந்தத் திட்டம், சிறுபான்மை, பெரும்பான்மை பங்குதாரர்களின் நலனுக்கு எதிராக இருக்காது’’ என்றார் ஐ.ஓ.பி-ன் தலைவர் சுப்பிரமணிய குமார். பழைய கடன்களை ஒழித்துக் கட்டுவது சரிதான். புதிய வாராக் கடன்கள் உருவாகாமல் இருக்க என்ன செய்யப் போகிறது ஐ.ஓ.பி? - சேனா சரவணன்


!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");