[ad_1]

``கடைசிப் பக்கத்தை வாசித்து முடிக்கிறபோது, நண்பனை இழந்துவிட்ட கணம் நமக்கு ஏற்படுவது நல்ல புத்தகத்தின் அடையாளம்'' - பால் ஸ்வீனி. #ChennaiBookFair

சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டத் தொடங்கிவிட்டது. தினமும் கலை நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உரை என ஒவ்வொரு நாளின் இலக்கிய மாலையும் மிக இனிமையாகக் கழிந்துவருகிறது. தத்துவம் சார்ந்த புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், தமிழ்  எழுத்தாளர்களின் படைப்புகள்  என நிறைய நூல்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நம் மொழிக்குப் பெருமைசேர்க்கும்விதமாக திருவள்ளுவரின் சிலை ஒன்று, புத்தகக் கண்காட்சி வாயிலில் வைக்கப்பட்டுள்ளது. மலையென குவிந்துகிடக்கும் புத்தகங்களில் எந்தப் புத்தகம் வாங்கலாம் என்ற எண்ணம் வாசகர்களுக்கு எழலாம்.  `கூகை' என்ற நாவலின் வழியே தமிழ் இலக்கிய உலகில் நீங்கா இடம்பிடித்த சோ.தர்மன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவரிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசகர்கள் வாங்கிப் படிக்கவேண்டிய முக்கிய நூல்கள் குறித்தும் பேசினோம்.


``இன்றைய காலகட்டத்தில் ஊடகத்தினுடைய தாக்கம் என்பது அதிகம் உள்ளது. மக்களுக்கான பெரும்பான்மையான நேரத்தை, அலைபேசியும் தொலைக்காட்சியுமே எடுத்துக்கொள்கின்றன. அவற்றை மீறித்தான் ஒருவன் வாசகனாக உருவாகவேண்டியுள்ளது. நுண்கலைகள் எனப்படும் நாட்டியம், சங்கீதம் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள, பிறரின் பங்களிப்பு அவசியம். ஆனால், பிறருடைய பங்களிப்பு இல்லாமல் நாம் கற்றுக்கொள்ள முடிவது `இலக்கியம் படைப்பது' மட்டும்தான். அதற்கு வாசிப்பு, மிக முக்கியமான ஒன்று.

`வாசகன் எதற்காக வாசிக்க வேண்டும்?' என்ற கேள்வி எழலாம். இன்றுதான் எல்லா தகவல்களும் இணையத்திலேயே கிடைக்கின்றனவே என்ற எண்ணம் தோன்றலாம். தகவல்கள் இணையம் மூலம் கிடைக்கலாம். ஆனால், அந்தத் தகவல் சார்ந்த ஆழமான சுவடுகள் தெரிய இலக்கியம்தான் வழிவகை செய்யும். இதை உணரும்போது, வாசகர்கள் இலக்கியத்தை வாசிக்க ஆரம்பித்துவிடுவர். வாசிப்பு, மனிதனை பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்லும். வாசிப்பின் ருசியை உணர்ந்த வாசகர்கள், வாசிப்பைத் தொடர ஆரம்பித்துவிடுவர்.

அப்படி வாசிப்பவர்களுக்கு, இந்தப் புத்தகக் கண்காட்சியில் வாங்க குறிப்பிட்ட சில நூல்களை பரிந்துரைக்கிறேன்.

1) யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன் ( நாவல்)

நாவல் என்ற வகையில், நான் பரிந்துரை செய்வது `யாமம்'தான். சமகாலத்தில் வெளிவந்த நாவல்களில் முக்கியமான ஒன்று. 

2) ஆண் பிரதியும் பெண் பிரதியும் - சமயவேல் (கட்டுரை)

கட்டுரைத் தொகுப்பில் சமயவேலின் `ஆண் பிரதியும் பெண் பிரதியும்' குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒன்று. வாசகர்கள் அதை வாங்கிப் படிப்பதன் வழியே அவர்களுக்கு வேறோர் எண்ண மாற்றம் நிகழ வாய்ப்புண்டு.

3) மர்ம நபர் - தேவதச்சன் (கவிதை)

தேவதச்சனுடைய கவிதை நூலான `மர்ம நபர்' மிக முக்கியமான ஒரு பிரதி. வாசகனை மிக எளிய முறையில் சென்று சேரும் வகையில் கவிதைகள் இருக்கும். இது அவரது முழுக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு.

4) கடவுள் சந்தை - மீரா நந்தா (கட்டுரை)

உலகமயமாக்கலைப் பற்றி வந்த மிக முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. பூரணச்சந்திரனின்  மொழிபெயர்ப்பில் வந்துள்ளது. 


5)  தியோடர் பாஸ்கரனுடைய சூழலியல் சார்ந்த அத்தனை புத்தகங்களும்.''
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");