[ad_1]
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.
ஹைதராபாத் நகரில், 'இந்தியா டுடே' சார்பில் நடந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஷால் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், தமிழகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால் ஆகியோர் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்.பிரகாஷ் ராஜ் மேலும் பேசும்போது, “மத்திய அமைச்சர் ஒருவர் அரசியலைமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டுமென்று தெரிவித்தார். அவருக்கு எதிராகக் கூட்டம் ஒன்றில் நான் பேசினேன். அந்தக் கூட்டத்திற்குப்பின், கூட்டம் நடந்த இடத்தை பா.ஜ.க தொண்டர்கள் கோமியம் விட்டுக் கழுவியிருக்கிறார்கள். நான் மாட்டிறைச்சி சாப்பிடுபவன் என்றும், மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு ஆதரவாளன் என்றும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். நான் எந்த மேடையில் பேசினாலும் இதேபோல செய்வார்களா என்பது தெரியவில்லை. படத்துக்கு 'செக்ஸி துர்க்கா' என்று பெயர் வைத்தால், அதற்கு எதிராகக் கொதித்தெழுகிறார்கள். 'ஏன் செக்ஸி பாத்திமா என்ற பெயரை வைக்கவில்லை' என்று கேள்வி எழுப்புகிறார்கள். இது,கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்பதை அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை. இதேபோல 'பத்மாவதி' பட விவகாரத்திலும் சிலரின் போராட்டத்தால், பல மாநிலங்கள் அந்தப் படத்தை திரையிட மறுத்துள்ளன. அதற்கு எதிராக, பிரதமர் மோடி ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துவிட்டார்” என்றார்.'செக்ஸி துர்க்கா' படம் தொடர்பான விவாதத்தில் பேசிய நடிகர் விஷால், “இதே போலத்தான் தமிழகத்தில் 'மெர்சல்' திரைப்படத்துக்கு எதிராக பா.ஜ.க தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோர் பேசினர். அந்தப் படம் மிக அதிக தொகை வசூல்செய்து சாதனை படைத்தது. அதேபோல 'செக்ஸி துர்க்கா' படமும் வசூலில் சாதனை படைக்கும்” என்றார்.
நன்றி : இந்தியா டுடே உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
``ரஜினி, கமல், விஷால் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்..!” - பிரகாஷ் ராஜ் கருத்து
TAGS :
COMMENTS