[ad_1]
காஞ்சிபுரம் காவல்துறையின் நெருக்கடியால், வெளிநாடுகளில் பதுங்கி வாழ்ந்துவந்த காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதர், கடந்த 4.10.2017 அன்று கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இதனால், காஞ்சிபுரத்தில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. போலி பாஸ்போரட் மூலம் தலைமறைவாக வாழ்ந்துவந்ததால், ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்த நிலையில், 10 நாள்கள் கழித்து ஸ்ரீதரின் உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், இறந்தது ஸ்ரீதர்தானா என்பதை டிஎன்ஏ சோதனை முடிவுகள் வெளிவந்த பிறகே அறிவிப்போம் என காஞ்சிபுரம் எஸ்.பி, சந்தோஷ் ஹதிமானி தெரிவித்திருந்தார்.
ஸ்ரீதரின் உடல் சென்னை விமானநிலையத்துக்கு வந்ததும், அங்கிருந்து செங்கல்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்ததும், ஸ்ரீதரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மருத்துவர்கள் எடுத்த டிஎன்ஏ மாதிரிகளை காஞ்சிபுரம் காவல்துறையினர் ஆய்வுக்கு அனுப்பினர். அவரது மகன் சந்தோஷ்குமார், மகள் தனலட்சுமி ஆகியோரின் டிஎன்ஏ மாதிரிகளும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அந்த ஆய்வின்மூலம், இறந்தது ஸ்ரீதர்தான் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த டிஎன்ஏ ஆய்வு முடிவுகள் தற்போது காஞ்சிபுரம் காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரீதர் மீது கொலை, கொலை மிரட்டல், ஆள்கடத்தல் உள்ளிட்ட சுமார் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. ஸ்ரீதரின் இறப்புச் சான்றிதழை காஞ்சிபுரம் காவல்துறையினர் ஸ்ரீதர் மீதான வழக்கு நடைபெறும் நீதிமன்றங்களில் சமர்பிப்பதன்மூலம் அந்த வழக்குகளிலிருந்து ஸ்ரீதர் பெயர் விடுவிக்கப்படும். மேலும், வழக்குகளில் உள்ள மற்றவர்கள்மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறும். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'இறந்தது ஸ்ரீதர் தான்'- டிஎன்ஏ ரிசல்ட்டால் முடிவுக்கு வரும் வழக்குகள்!
TAGS :
COMMENTS