[ad_1]
Chennai: எழுத்தாளர் ஞாநியின் விருப்பப்படி அவரது உடல், சென்னை அரசு மருத்துவமனை கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது. எழுத்தாளர் ஞாநியின் உடலைத் தானமாக அளிக்க, கே.கே.நகர் இல்லத்திலிருந்து சென்னை மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
எழுத்தாளர் ஞாநி சங்கரன், உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். 63 வயதான ஞாநி, சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது. எழுத்தாளர் ஞாநியின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. தன் உடலை மருத்துவமனைக்குத் தானமாக வழங்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது. அவரின் விருப்பப்படியே உடல் மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஞாநியின் விருப்பப்படி நடந்தது உடல் தானம்!
TAGS :
COMMENTS