[ad_1]








புதுக்கோட்டை ரயில் நிலையம் தொடர்ந்து பெயர் சர்ச்சையில் மாட்டித் தவிக்கிறது. கொஞ்ச நாள்களுக்கு முன்புதான் 
ரயில் நிலையத்தின் பெயரை இந்தியில் போர்டாக வைத்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. உடனடியாக அந்தப் பெயரை தமிழில் மாற்றும் முயற்சியில் அவசரகோலமாக ஈடுபட்டு, 'புதுக்கோட்டை' என்ற பெயர் 'புதுக்காட்டை'என்று தவறாகத் தெரியும்படியாக போர்டை வைத்தார்கள். இப்போது அந்தப் போர்டும் இல்லை. பெயரில்லாத அனாதை ரயில் நிலையமாகத்தான் தற்போது காட்சி அளிக்கிறது.என்னதான் ஆச்சு என்று ரயில்நிலையத்தில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரித்தோம்."இந்த போர்டு விவகாரம் கன்னித்தீவுகதை மாதிரி ஒரு முடிவே இல்லாமல் ஓடிக்கிட்டு இருக்கு. முதலில் இந்தியில்  இருந்த பெயர்ப் பலகையை தமிழுக்கு மாத்தனும்னு அனைத்துக்கட்சியினரும் கூடிவந்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் பேசினார்கள். அப்போவெல்லாம் மாத்தாதவங்க, விகடன்.காமில் செய்தி போட்ட மறுநாளே தமிழில் பேரை மாத்துனாங்க. தரமில்லாத பொருள்களைக் கொண்டு அவசர அவசரமாக அந்த ஏற்பாட்டை செஞ்சதால போர்டு வீணா போயிடுச்சு. அதோட, ஒரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள முக்கியமான ரயில் நிலையத்துக்கு இப்படியா "ஏப்பசாப்பை'யா பேரை வைப்பீங்கனு திருச்சியில் உள்ள ரயில்வே டிவிஷனுக்குத் தொடர்ந்து புகார் போயிருக்கு. அதுக்குப் பிறகு  தமிழ், ஆங்கிலம், இந்தி னு மூணு மொழிகளில் இருந்த பெயர்களை சில நாள்களுக்கு முன்பு ரயில்வே ஊழியர்கள் நீக்கிட்டாங்க. அப்போ, அவங்ககிட்டே கேட்டோம்.' புதுசா, பெருசா பெயர்ப்பலகை வைக்க ஏற்பாடுகள் நடந்துகுட்டு இருக்கு'னு சொன்னாங்க" என்றார்கள்.இதுகுறித்து புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த சி.பி.எம்.எல் (cpml) மக்கள் விடுதலை அமைப்பின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான விடுதலை குமரன் நம்மிடம் பேசும்போது, "புதுக்கோட்டை ரயில் நிலைய அதிகாரிகள் மெத்தனமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தமிழ் பெயர்ப் பலகை பற்றி பேசும்போதெல்லாம் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள். போர்டு அகற்றப்பட்டு பத்து நாள்களுக்கு மேல் ஆகிறது. கேட்டால், புதுசா வைக்கப்போறோம்னு சொல்றாங்க. எப்போ வைப்பீங்கனு கேட்டா, டிவிஷன் அதிகாரிகளுகிட்டேதான் கேட்கணும்னு சொல்றாங்க. புதுக்கோட்டை தலைநகரின் ரயில் நிலையம் பெயர்ப்பலகை இல்லாமல் கடந்த பத்து நாள்களுக்கு மேலாக இருப்பது வெட்கக்கேடு" என்று பொரிந்துத்தள்ளினார்.இதுபற்றி நிலைய அதிகாரியை தொடர்புகொண்டு பேசினோம். "மூன்று மொழிப் பெயர் பலகைகளையும் புதிதாக அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டு வேலை நடந்துகொண்டு இருக்கிறது. இந்த ஸ்டேஷனுக்கான எலெக்ட்ரிக்கல் போர்மேன் மானாமதுரையில் இருக்கிறார். அதுபோல், இன்ஜினீயர் மதுரை டிவிஷனில் இருக்கிறார். இரண்டு பேரும் அங்குள்ள வேலைகளை முடித்துவிட்டு இங்கே வரவேண்டும். போர்டு தயாராகி விட்டால், அவர்கள் பொருத்தி விடுவார்கள்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");