[ad_1]
Karur:
"ஐந்தில் வளையாயது, அறுபதில் வளையாது'னு சொல்வாங்க. அதனால், எங்க மாணவர்களுக்கு படிப்போட சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள சிறுவயதிலிருந்தே பழக்க, இங்குள்ள சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ளச் செய்கிறோம். அதன் அடிப்படையில்தான், எங்க ஊர் ரயில் நிலையத்தை மாதத்துக்கு ஒரு மாணவர் குழுவை வைத்து சுத்தம்செய்கிறோம்" என்று மகிழ்கிறார்கள் வெள்ளியணை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது வெள்ளியணை. இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், தனது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக்கொண்டு, பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். பள்ளி வளாகம் மற்றும் வெள்ளியணை முழுக்க மரக்கன்றுகளை வைத்து, மாணவர்கள்மூலம் பராமரித்துவருகிறார். அதனடிப்படையில்தான், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணும் பொருட்டு, வெள்ளியணை ரயில் நிலையத்தை மாதத்துக்கு ஒருமுறை ஆசிரியர் மற்றும் மாணவர்களோடு சென்று, சுத்தப்படுத்தி வருகிறார். ஆசியர்களும் மாணவர்களும் இந்த தூய்மைப்பணியில் ஆர்வமுடன் கலந்துகொள்கின்றனர்.
நாம், தலைமை ஆசிரியர் தர்மலிங்கத்திடம் பேசினோம். "எங்க பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம்ங்கிற அமைப்பை ஆரம்பித்து, இப்படி சுற்றுச்சூழலைக் காக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளோம். அதனடிப்படையில்தான்,வெள்ளியணை ரயில் நிலையத்தை சுத்தப்படுத்திவருகிறோம். மாணவர்களை சிறு வயதிலேயே எப்படி வடிவமைக்கிறோமோ, அதன்படிதான் காலம்முழுக்க அவர்கள் செயல்படுவார்கள். மெத்தப் படித்தவர்கள்கூட, குப்பைகளை நடுரோட்டில் வீசுவார்கள். அதற்குக் காரணம், அவர்களை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்தாததுதான். அதனால், ஏட்டுக் கல்வியோடு, சுற்றுச்சூழல் கல்வியையும் நாம் போதிப்பது அவசியம்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ரயில் நிலையத்தை சுத்தம்செய்த அரசுப் பள்ளி மாணவர்கள்!
TAGS :
COMMENTS