[ad_1]
Thiruvallur: பொன்னேரியில் உள்ள கனரா வங்கியின் மேலாளர், வாடிக்கையாளரை ஏமாற்றி 50 லட்ச ரூபாய் கடனில் சிக்கவைக்க முயன்றது தற்போது அம்பலமாகியுள்ளது. அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
மீஞ்சூரை அடுத்த நாலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு, தொழிற்கடன் பெற மகேந்திரன் என்ற இடைத்தரகர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கனரா வங்கியை அனுகியுள்ளார். முரளி மற்றும் அவரது மனைவி பெயரில் இருந்த சொத்துகளை அடமானமாகப் பெற்ற வங்கி மேலாளர் ராஜா, ரூ.50 லட்சம் கடனாக வழங்கியுள்ளார்.வங்கிக் கடனுக்கான வட்டியையும் அசலையும் முரளி செலுத்திவந்த நிலையில், அவரது வங்கிக் கணக்கு திடீரென முடக்கப்பட்டது. பதறிப்போன முரளி, இதுகுறித்து வங்கியை அணுகி விளக்கம் கேட்டுள்ளார். அப்போதுதான், அவரது கையெழுத்தைப் பயன்படுத்தி சந்திரசேகர் என்ற மற்றொரு இடைத்தரகருக்கு 50 லட்ச ரூபாய் கடனாக வழங்கப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் ராஜாவிடம் முரளி கேட்டபோது, இடைத்தரகர்கள் மகேந்திரன், ஆர்.கே சந்திரசேகர் ஆகியோருடன் சேர்ந்து முரளியை மிரட்டியுள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாகவும் மிரட்டல் தொடர்பாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முரளி புகார் அளித்தார். இதையடுத்து, இடைத்தரகர்கள் மகேந்திரன் மற்றும் சந்திரசேகரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், வங்கி மேலாளர் ராஜாவைத் தேடிவருகின்றனர். ’கடன் பெறும் மக்களில் பலர் ஆவணங்களில் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் கையெழுத்துப் போடுகின்றனர். இனி, கவனமாக இருக்க வேண்டும்’ என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கடன் வாங்கியவரைப் பதறவைத்த வங்கி மேலாளர்!- சிக்கவைத்த கையெழுத்து
TAGS :
COMMENTS