[ad_1]

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


 



ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி முன்பு தீபா, தீபக் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இன்று இளவரசி மகள் கிருஷ்ணபிரியா ஆஜராகி விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதா, அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோது, அவரை உடனிருந்து கவனித்துக்கொண்ட சசிகலாவுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, தற்போது மெளன விரதம் இருப்பதால், அவரால் விசாரணை ஆணயத்தில் ஆஜராக முடியாது என கர்நாடக சிறைத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது. சசிகலா  சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராவார்  என்று கூறப்படுகிறது. 'ஜனவரி இறுதி வரை சசிகலா சிறையில் மௌன விரதம் இருப்பார்' என டி.டி.வி.தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");