[ad_1]
Chennai:
நடிகர் ரஜினிகாந்த், அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில், ஆன்மிக அரசியல் என்றொரு வார்த்தையைச் சொல்லவும் செய்தார். அதன்பிறகு, தமிழகத்தில் அந்த வார்த்தை ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது. ஆன்மிக அரசியல் எப்படியிருக்கும் என விமர்சனரீதியாகவும், கிண்டலாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துவருகின்றன.இன்னொருபுறம், வைரமுத்துவின் ஆண்டாள் கட்டுரை தொடர்பான விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவும் ஆன்மிகத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால், இப்போதைக்கு ஆன்மிகம் என்ற வார்த்தை அரசியல் மேடைகளில், ஊடக விவாதங்களில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முக்கிய இடம் பெற்றுவருகிறது. இந்நிலையில், தமிழக செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இன்று தன் பங்குக்கு ஆன்மிக அரசியல் பற்றிப் பேசியுள்ளார். அவர் பேசும்போது, “திராவிடமும் ஆன்மிகமும் கலந்த அரசியல் கட்சிதான் அ.தி.மு.க. ஜெயலலிதா, ஏற்கெனவே ஆன்மிக அரசியலைத்தான் செய்துகொண்டிருந்தார். தி.மு.க-வினர் இந்து மதத்தைப் பழிப்பதையே வாடிக்கையாகக்கொண்டுள்ளனர். யார் புதிய கட்சி தொடங்கினாலும் அ.தி.மு.க-வுக்கு பாதிப்பு இல்லை” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆன்மிக அரசியலுக்கு முன்னோடி யார் தெரியுமா?-அமைச்சரின் `அடடே' பதில்
TAGS :
COMMENTS