[ad_1]
மன்னார்குடியில் நடந்த எம்ஜிஆர் 101 வது பிறந்த நாள் விழாவில் பேசிய சசிகலா தம்பி திவாகரன், கட்சி, கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை அவர்களாகவே தருவார்கள் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
திவாகரன் தலைமையில் மன்னார்குடி பந்தலடியில் உள்ள மண்டபம் ஒன்றில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கழகத்துக்காகப் பணியாற்றிய மூத்த உறுப்பினர்கள் நான்கு பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முன்னதாக தேரடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து திவாகரன் மகன் ஜெயானந்த் தலைமையில் பேரணியாக விழா நடக்கும் இடத்திற்கு வந்தனர்.
விழாவில் பேசிய திவாகரன், `இது புரட்சித் தலைவர் பிறந்த நல்ல நாள். இந்த நாளில் யாரையும் திட்ட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அண்ணன் சிவ.ராஜமாணிக்கம் பழைய நினைவுகளைப் பேசி அவரும் கண்கலங்கி எல்லோரையும் கண் கலங்க வைத்து விட்டார். சொந்தக் கட்சி வேட்பாளர்களையே தோற்கடித்த பெருமை அமைச்சர் ஆர்.காமராஜுக்கு உண்டு. இப்படிச் செய்து அமைச்சர் பதவியில் இருக்கும் அவருக்கு மானம் இருக்கா எனத் தெரியவில்லை. ஒரு முறை நான் சசிகலா, ஜெயலலிதா ஆகியோர் ராமவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது, பின்னாளில் சசிகலா அ.தி.மு.கவிற்கு பெரிய அளவில் உதவியாக இருப்பார் என அப்போதே சொன்னார். அது போலவே நடந்தது.
ஜெயலலிதா இறந்த சமயத்தில் எங்களுக்குப் பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அதனால்தான் ஏற்கெனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தையே முதலமைச்சராக தேர்வு செய்தோம். அவரும் ஒருவாரம் வரை நன்றாகத்தான் இருந்தார். பின்னர் டெல்லி சென்ற அவரிடம் ஒரு ஃபைலை கொடுத்த மத்திய அரசு உங்கள் மேல் இவ்வளவு பிரச்னைகள் உள்ளது. எனவே நாங்கள் சொல்வதுபோல் செய்யுங்கள் என சொல்ல அதன் பிறகுதான் அவர் ஜெயலலிதா சமாதியில் தியானத்தில் உட்கார்ந்தார். அந்த சமயத்திலும் ஆட்சிக்கு ஆபத்து வர உங்களைபோல் தொண்டர்களை வைத்து கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை தங்கவைத்து எடப்பாடியை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தோம். அவர் பதவியேற்ற பிறகு பூங்கொத்தோடு என்னை வந்து பார்த்து என் காலில் விழுந்தார். அப்போது `நான் ஓ.பி.எஸ் மாதிரி இருக்க மாட்டேண்ணே' என சொன்னார். இப்போதுதான் புரிகிறது எடப்பாடி துரோகம் செய்வதில் ஓ.பி.எஸ்-ஸுக்கு மேலே என்பது. இரட்டை இலைச் சின்னம் இருக்கிற இடத்தில் இருந்தால்தான் சிறப்பு. கிரீடம் ராஜா தலையில்தான் இருக்க வேண்டும். பரதேசி தலையில் இருக்கக் கூடாது. அவர்களாகவே நம்மிடம் கட்சிக் கொடி, இரட்டை இலைச் சின்னத்தை கொண்டு வந்து தருவார்கள்" எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'ஓ.பி.எஸ் மாதிரி நான் இருக்கமாட்டேண்ணே!'- ஈ.பி.எஸ்.ஸின் ரகசியத்தை உடைத்த திவாகரன்
TAGS :
COMMENTS