[ad_1]

கடும் பனிமூட்டம் காரணமாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதிகளில் ரயில் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. 






டெல்லி, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அடர் பனியால், போக்குவரத்து சேவை அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் சிக்கலானதாக மாறிவிடுகிறது. குறிப்பாக, விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடந்த சில நாள்களாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த வெள்ளிக்கிழமை முதலே பனிப்பொழிவு அதிகமாகக் காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி டெல்லிக்கு வரவேண்டிய 39 ரயில்கள், தாமதமாக வந்துசேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், 4 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதோடு, 13 ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவால், பீகார் மாநிலத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரியை எட்டியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தால் ஏரியின் பல பகுதிகள், உறைந்து பனிக்கட்டியாகக் காட்சியளிக்கின்றன.  
 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");