[ad_1]
காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத பெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைன் மூலம் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இங்கிலாந்து வாழ் இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
இங்கிலாந்தின் வோல்வெர்ஹாம்டன் பகுதியில் வசித்துவரும் 19 வயது இளைஞரான குர்தெஜ்சிங் ரந்தவா, டார்க் வெப் மூலம் வெடிபொருள்களை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டரைப் பெற்றுக்கொள்ளும் முகவரியாக வேறு ஒருவரின் முகவரியையும் அவர் கொடுத்துள்ளார். இதைக் மோப்பம் பிடித்த இங்கிலாந்து குற்றப்பிரிவு காவல்துறையினர், அந்த பார்சலில் இருந்த வெடிகுண்டுகளை இடமாற்றி, டம்மியாக ஒரு வெடிகுண்டை வைத்து அந்த குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பியுள்ளனர். அந்த பார்சலைப் பெற்றுக்கொண்ட ரந்தவா, அதன்மூலம் தனது பெற்றோர்களைக் கொல்ல முயற்சி செய்துள்ளார். இதையடுத்து அவரைக் கடந்த மே மாதத்தில் கைதுசெய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்த வழக்கு பர்மிங்ஹாம் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கு விசாரணையில், தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், அதனால் வெடிகுண்டுகள் மூலம் அவர்களைக் கொல்லத் திட்டமிட்டிருந்ததாகவும் ரந்தவா வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அவரைக் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்தும் தீர்ப்பளித்தது.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பெற்றோரைக் கொல்வதற்காக ஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்!
TAGS :
COMMENTS