[ad_1]
தமிழக சட்டப்பேரவையில் இன்று, எம்.எல்.ஏ-க்களுக்கான ஊதிய உயர்வு மசோதா தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று, தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணையத்தை முற்றுகையிடுவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இன்று நடைபெறும் தமிழக சட்டப்பேரவையில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதா தாக்கல்செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயரும். மேலும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியமாக 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்று தெரிகிறது. போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டுப் போராட்டம் நடத்தும் இந்த நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கும் மசோதா நிறைவேற்றுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கிடையில் எம்.எல்.ஏ-க்களின் ஊதிய உயர்வு மசோதா இன்று நிறைவேற்றப்படுமா?
TAGS :
COMMENTS