[ad_1]
சென்னை கோபாலபுரத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். இது குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து கூறினார்.
சந்திப்புக்குப் பின்னர் பேசிய ரஜினிகாந்த், `கருணாநிதியைச் சந்தித்து புத்தாண்டு நல்வாழ்த்துகளை கூறினேன். அவரது உடல்நலத்தை விசாரித்தேன். எனது அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கூறினேன். பின்னர், அவரிடம் ஆசி பெற்றேன்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறி கிளம்பினார்.
ரஜினி சென்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர், `தி.மு.க-வின் ஆதரவு ரஜினிக்குத் தேவையா இல்லையா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். அவரது அரசியல் ஆன்மிக அரசியல் என்பதை தெளிவாக சொல்லிவிட்டார். இனி நடப்பதைப் பார்ப்போம். விஜயகாந்த் கூட கட்சி தொடங்கியபோது கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றார். அதேபோலத்தான் ரஜினியும். ரஜினி, கருணாநிதியைச் சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. ரஜினி, திராவிட அரசியலை அழிப்பதற்காக சிலரின் உந்துதலால் கட்சி தொடங்கி இருப்பதாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைத்து பலர் தோற்றிருக்கிறார்கள். அந்த வரலாறு அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்களால் பண்படுத்தப்பட்டது. தமிழ்நாடு பெரியாரிட் மண். இது திராவிட அரசியலின் மண்' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`ரஜினியை தி.மு.க ஆதரிக்குமா?' - மு.க.ஸ்டாலின் பதில்
TAGS :
COMMENTS