[ad_1]
அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கடுமையாக முயன்று வருகின்றனர். அதன் ஒருகட்டமாகத்தான் மு.க.ஸ்டாலின் நினைத்தால் பஸ் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில் நுட்ப ஊழியர்கள் ஆகியோர் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தப்போராட்டத்தில் கடந்த 4-ம் தேதி முதல் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பங்கேற்கவில்லை. போராட்டத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் ஸ்டிரைக் காரணமாக முழுமையாக பஸ் சேவை கிடைக்காமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் பஸ் ஸ்டிரைக் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போராட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தனர்.
இதையடுத்து, தொழிற்சங்கங்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்த பணத்தை அரசு வழங்க வேண்டும். ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்கள்மீது போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருவது அரசுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கடுமையாக அரசை விமர்சித்துவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் பஸ் ஸ்டிரைக் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பேசினார். இதுகுறித்து போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், “அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பஸ்களை இயக்கும் அண்ணா தொழிற்சங்க டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கும் சேர்த்ததான் நாங்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடிவருகிறோம். இதுவரை இல்லாத ஊதிய உயர்வு என்று ஆளுங்கட்சிக்குச் சாதகமாக சிலர் பேசுகின்றனர். அவர்கள் அனைவரும் மனசாட்சிப்படி பேச வேண்டும்.
தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த பணத்தைகூட தர முடியாத நிதிச்சுமையில் போக்குவரத்துக் கழகம் உள்ளது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள்கூட வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ஓய்வூதியம் வழங்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைத் தவிர பெரும்பாலான தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் போராட்டத்தைக் கைவிடலாம் என்று பேசியுள்ளனர். பேட்ஜ் அணிந்தபடி பஸ்களை இயக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால், அதற்கு தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் பிடிகொடுக்கவில்லை. இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் முதல்வருக்குத் தெரியவந்தது. அதை மனதில் வைத்துதான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்ற வேண்டுகோளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்தார். ஆனால், போராட்டம் கைவிடப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் பிற்பகலில் போக்குவரத்துக் கழக வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையில் நீதிபதிகள் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இதற்கிடையில் சட்டபேரவையில் 110 விதியின்கீழ் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு 750 கோடி ரூபாய் பொங்கல் பண்டிகைக்கு முன் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இப்போதுகூட அரசுப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. ஊதிய உயர்வை வலியுறுத்திதான் எங்களது போராட்டம் நடந்துவருகிறது. தொழிற்சங்கங்கள் கேட்கும் ஊதிய உயர்வைத் தரும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘மு.க.ஸ்டாலின் நினைத்தால் பஸ் ஸ்டிரைக்கை முடிக்கலாம்!’ - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோள்
TAGS :
COMMENTS