[ad_1]





டெல்லி மருத்துவக் கல்லூரியில் மர்ம மரணமடைந்த சரத் பிரபுவின் உடல், நேற்று இரவு அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மதியம் மாணவர் சரத் பிரபுவின் இல்லத்துக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி.தினகரன் வந்திருந்தார்.
முன்னதாக தினகரன் வருவதற்கு முன்பு,  அவருக்கான ஏற்பாடுகளை கவனிக்கிறோம் என்றுகூறி, துக்க வீட்டைப் பாடாய்ப்படுத்திவிட்டார்கள் தினகரன் ஆதரவாளர்கள். "சரத் பிரபுவின் உருவப் படத்துக்கு அண்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தப் போகிறார். எனவே மாணவனின் போட்டோ ஒன்றை வீட்டில் தயாராக மாட்டி வையுங்கள் என்று சரத் பிரபுவின் உறவினர்களிடம் தினகரன் தரப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் எங்கள் சமூகத்தில் 16-ம் நாள் காரியத்தின்போதுதான் இறந்தவரின் போட்டோ படத்தை வைத்து பூஜை செய்வோம். எனவே இப்போது போட்டோ எல்லாம் வைக்க முடியாது என்று உறவினர்கள் தரப்பில் மறுத்திருக்கிறார்கள். பின்னர் யோசனையில் ஆழ்ந்த தினகரன் அணி நிர்வாகிகள், அங்கு மாணவனின் வீட்டுக்கு வெளியே கம்பி வேலியில், திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் சார்பில் கட்டப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி பேனரை கழட்டிக்கொண்டு வந்து, அதில் எம்.எல்.ஏவின் பெயரை மட்டும் மறைத்துவிட்டு, அந்த பேனர்க்கு மலர் மாலைகளை கட்டி, மறைந்த சரத்பிரபுவின் வீட்டு வாசலில் அலங்காரம் செய்து வைத்துவிட்டார்கள். தினகரனும் வந்து சரத்பிரபுவின் குடும்பத்தாரிடம் இரங்கல் தெரிவித்துவிட்டு, அந்த பிளக்ஸ் பேனர்க்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");