[ad_1]





இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு எதிர்காலத்தில் பயிற்சியாளராக வேண்டும் என்று பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கூறியதற்கு மிதாலி ராஜ் பதிலளித்துள்ளார்.




இங்கிலாந்தில் கடந்தாண்டு நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முன்னேறியது. மேலும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை மற்றும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், அந்த தொடரில் படைத்தார்.  

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மிதாலி ராஜ் கலந்துகொண்டார். உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி மற்றும் மிதாலி ராஜின் செயல்பாடுகளைப் பாராட்டிய ஷாரூக்கான், போட்டியின்போது புத்தகம் வாசித்தது குறித்தும் மிதாலியிடம் கேட்டார். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த மிதாலி, ‘ஒவ்வொருவரும் உலகக் கோப்பையை நமது அணி வெல்ல வேண்டும் என்றே நினைப்பார்கள். அந்த நேரத்தில் நமக்கு கூடுதல் பிரஷர் ஏற்படும். அதைப்பற்றி நினைக்காமல், போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும். போட்டியின்போது புத்தகம் வாசிப்பது நெருக்கடியான சூழலைச் சமாளிக்க உதவுகிறது’ என்றார். இதையடுத்து பேசிய ஷாரூக்கான், இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக மிதாலி ராஜ், எதிர்காலத்தில் பணியாற்றிட வேண்டும் என்று தமது விருப்பத்தைக் கூறினார். அதுகுறித்து கருத்துத் தெரிவித்த மிதாலி ராஜ், ’நான் எப்பொழுதுமே சிறப்பானதைக் கொடுக்கவே விரும்புகிறேன்’ என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");