[ad_1]
உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் மகேந்திரன் அவர்கள் கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் ";புகழேந்தி என்னும் நான் "; திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த 18ம் தேதி புதுக்கோட்டைக்கு வந்தார். தொடர்ந்து அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வந்தன. இன்று அவருக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் படமாகவில்லை. காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தார். அதனால், மதியம் 1 மணியளவில்தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்றுவிட்டார். அங்குதான் அவர் தனது மதிய உணவை உட்கொண்டார்.
இதற்கிடையில், திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக புதுக்கோட்டை முத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மகேந்திரனுக்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டபோது, ";தற்போது, ஐ.சி.ஐ பிரிவில் இருக்கிறார். அவருக்கு ஒன்றுமில்லை. நலமாக இருக்கிறார்"; என்று கூறியுள்ளனர்.
உடல்நலக் குறைவால் இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி!
TAGS :
COMMENTS