[ad_1]



``90 சதவிதிதம் தாெண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்" என்று டி.டி.வி.தினகரன் கரூரில் பேசினார்.கரூர் அருகே நெரூரில் சாமி தரிசனம் செய்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபாேது, ``90 சதவிகிதம் தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். கட்சியை வழிநடத்தும் கடமை எங்களுக்குதான் உண்டு. அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரில் தொடர்ந்து செயல்பட கோர்ட்டை நாட உள்ளோம். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் பெயரளவுக்குதான் செயல்படுகின்றனர். கட்சி வழக்கு நிலுவையில்தான் உள்ளது. கட்சி, சின்னம் என்று இரண்டையும் மீட்பதே எங்களது குறிக்கோள்.18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கவழக்கு முடிவுக்கு வந்த பிறகே, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலாேசிப்பாேம். எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செல்லாது எனத் தீர்ப்பு வந்தால், தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமல்ல, செந்தில் பாலாஜி உள்ளிட்டோரும் எங்கள் கட்சியில் சேர முடியாது. உள்ளாட்சி தேர்தல், எம்.பி தேர்தலை சந்திக்க கட்சி சின்னம் தேவைப்படுகிறது. அதை மீட்கும்வரை ஓயமாட்டாேம்" என்றார்.



 
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");