[ad_1]





தென்னாப்பிரிக்கா இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதனால், மூன்று போட்டிகள்கொண்ட தொடரையும் 2-0 என்ற ரீதியில் இழந்தது இந்திய அணி. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி சார்பில், லுங்கிசானி கிடி அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தப் போட்டிகுறித்து தனது கருத்துகளை லுங்கிசானி தெரிவித்துள்ளார். 




லுங்கிசானி, `எனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா போன்ற ஒரு அணிக்கு எதிராக நன்றாக பந்து வீசியது மன நிறைவைத் தருகிறது. இந்தப் போட்டியில் நான் எத்தனை விக்கெட் எடுத்திருந்தாலும், விராட் கோலியின் விக்கெட்தான் எனக்கு மிகவும் ஸ்பெஷலாக இருந்தது. ஏனென்றால், அந்த விக்கெட்டுக்காக ஒரு கேம் ப்ளானை வடிவமைத்து அதைக் கச்சிதமாக செயல்படுத்தினேன். கோலியின் விக்கெட்டை கைப்பற்றியபோது எனது கேம் ப்ளான் செயல்படுத்தப்பட்டது குறித்து மிகவும் மகிழச்சியடைந்தேன்' என்று நெகிழ்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");