[ad_1]





தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துக் கட்டணங்களை தமிழக அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. 





தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்மூலம் தமிழகத்தில் 22,509 பேருந்துகள் இயங்குகின்றன. 1,40, 615 தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றிவருகின்றனர். நாளொன்றுக்கு, ஏறத்தாழ 88.64 லட்சம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 2.02 கோடி மக்கள் அரசுப் பேருந்துகளில் பயணம்செய்கிறார்கள்.எனினும், போக்குவரத்துத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக அரசு சொல்கிறது. புதிய பேருந்துகளின் விலை உயர்வு, உதிரிப்பாகங்கள் விலை உயர்வு, டீசல் மற்றும் ஆயில் விலை உயர்வு, பணியாளர்களின் ஊதியம் அதிகரித்தது ஆகிய காரணங்களால், செலவு கூடிக் கொண்டேபோகிறது. ஆகவே, கட்டணத்தை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பின்படி,போக்குவரத்துக் கழகங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.9 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகின்றனவாம். தொடர்ச்சியான வருவாய் இழப்பால் தொழிலாளர்களுக்கு கொடுக்கவேண்டிய பணப்பயன்களைக்கூட கொடுக்க இயலவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் தற்போது இயங்கும் பேருந்துகளில் 75 சதவிகிதப் பேருந்துகள் 6 வருடங்கள் பழசானவை. ஆகவே, அவற்றின் இயக்கத்திறன் குறைந்துவருகிறது. இதனால், புதிய பேருந்துகள் வாங்கவேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது. அதற்குப் பணம் தேவை.கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து கர்நாடக அரசு 16 முறையும், ஆந்திர, கேரள அரசுகள் தலா 8 முறையும் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. அதேசமயம், தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் போக்குவரத்துக் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. மேலும், இப்போது உயர்த்தியுள்ள கட்டணம், அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது பெரும்பாலும் குறைவாகவே உள்ளது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");