[ad_1]





கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ்க்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 


 


பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் கால்நடைகளுக்குத் தீவனங்கள் வாங்கியதில் ரூ.89.27 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் உள்ளிட்ட 34 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் அரசுத் தரப்பு சாட்சியாக மாறி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை ராஞ்சி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது.டிசம்பர் மாத இறுதியில் தீர்ப்பை அறிவித்த நீதிபதி ஷிவ்பால் சிங், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட 15 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெகன்னாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ்-க்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");