[ad_1]



திரும்பும் திசையெல்லாம் சாதி சமூகத் தாக்குதல்கள் பற்றிய செய்திகள் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்க இசைக்கு சாதியில்லை சமத்துவமானது என்று ஒரு திரைப்பட இயக்குநர் முன்னின்று கானா பாடகர்களையும் ராப் பாடகர்களையும் இணைத்து ஒரு இசை ஆல்பத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். இதைப் போல் கலைகளில் சாதி பேதம் ஏதுமின்றி சமத்துவத்தை நிலைநாட்ட கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், கதக் கலைகளையும் மக்கள் கலைகளான பறையாட்டம், சிலம்பாட்டம், கட்டைக்கூத்து போன்றவற்றையும் சரிசமமாக ரசிகர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதைத் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முன் நின்று நடத்தவருகின்றனர் ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் அமைப்பாளர்கள்.


‘2017 யுனஸ்கோவின் சிறந்த கலைப்படைப்பு நகரங்களின் பட்டியலில் இடம்பெற்ற சென்னை நகரத்தை, அத்தகுதியின் பொதுமதிப்புக்குச் சமமாக உருவாக்க வேண்டும் என்பது இவ்விழாவின் நோக்கம்’ என்கிறார்கள் விழா அமைப்பாளர்கள்.

ஊருர் ஆல்காட் குப்பம்

60 வருடங்களுக்கு முன்பு தோன்றிய பெசன்ட் நகர் பற்றி பெரும்பாலான சென்னை வாசிகள் அறிவார்கள். ஆனால், அந்த பெசன்ட் நகர் உருவாவதற்கு முன்பிருந்தே காலம் காலமாக பாரம்பர்ய மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் அதே பகுதியிலுள்ள ஊரூர் ஆல்காட் குப்பத்தைப் பற்றி பலரும் அறிந்திருக்க முடியாது. “இந்த ஊரூர் ஆல்காட் விழாவின் மூலமாக எங்கள் பகுதி உலகத்தின் பார்வையில் வரும், சமூகத்தின் பல தரப்புகளுடன் எங்கள் உறவு வளரும். மேலும் எங்கள் பண்பாடு, மரபுகள், வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடங்களுக்கு சேர வேண்டிய மதிப்புகள் கிடைக்கும் என்பதே இவ்விழாவை எங்கள் கிராமத்தில் நடத்துவதற்கான முக்கிய காரணம்.

“2017-ல் நடைபெற்ற விழாவில் அறிமுகமாகிய நண்பர்களின் உதவியால் இந்தப் பகுதியில் நீண்டகாலமாக பெறமுடியாத பாதாளச் சாக்கடை இணைப்பைப் பெற முடிந்தது” என்று கூறுகிறார்கள் விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள்.

இந்த வருடத்தின் நிகழ்ச்சியானது, ‘மல்லிப்பூ அண்ட் தி அல்வாஸ்’ என்ற ராப் இசையில் புகழ்பெற்ற சோபியா அஷ்ரப் குழுவினரின் இசை நிகழ்ச்சி, கட்டைக்கூத்து போன்ற தமிழ் மரபு சார்ந்த கலைகளுடன் வருகின்ற ஜனவரி 20 மாலை 6:15 மணியளவில் மயிலாப்பூர் ராக சுதா ஹாலில் நடைபெற உள்ளது.

மேலும், ஜனவரி 21 மாலை 6:15 மணியளவில் அதே மயிலாப்பூர் ராக சுதா ஹாலில் பொய்க்கால் குதிரை நடனம் மற்றும் கரகம், பாவ கதகளி நடைபெறவுள்ளது. ஜனவரி 27 மாலை 6 மணியளவில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் டி.எம்.கிருஷ்ணா குழுவினர் நடத்தும் கர்நாடக சங்கீதக் கச்சேரி, பிப்ரவரி 3 காலை 6 மணி முதல் எல்லையம்மன் கோயில், ஊரூர் ஆல்காட் குப்பம் கடற்கரை சுத்தம் செய்யும் பணி ஆகியன நடைபெறவுள்ளது.


பெசன்ட் நகர் எல்லையம்மன் கோயில் கடற்கரையில் பிப்ரவரி 10 மற்றும் 11-ம் தேதி நடக்கவிருக்கும் விழாவில் ஹிப் ஹாப் & கிராஃபைட் சுவர் எழுத்து நிகழ்ச்சி, பறை ஊர்வலம், நாடகம், இஸ்லாமிய பக்தி பாடல்கள், நாதஸ்வரம் ஊர்வலம், சிலம்பாட்டம், கதக் நடனம், வில்லுப்பாட்டு, கானா பாடல்கள் முதலிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கலையை சாதியோடு சேர்த்து பார்ப்பதை தவிர்த்து கலையை கலையாக மட்டும் பார்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர் ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவின் அமைப்பாளர்கள்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");