[ad_1]





அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடாக, `நமது அம்மா' நாளிதழ் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியாகிறது.






அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க உடைந்தது. சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இருபிரிவுகள் ஏற்பட்டன. இதற்கிடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். சசிகலா அணியை தினகரன் வழிநடத்தத் துவங்கினார். சில நாள்களுக்குப்பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஒன்று திரண்டு, தினகரனை ஒதுக்கினர். தினகரனுக்கு சில எம்.எல்.ஏக்கள் ஆதரவளித்தனர். இதனால் அ.தி.மு.க-வில், பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என 3 அணிகள் உருவாகின. பன்னீர் செல்வம் அணியும் பழனிசாமி அணியும் இணைந்தன. தினகரன் தனி அணியாகச் செயல்பட்டுவருகிறார். ஜெயலலிதா இருந்த காலத்தில், அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழாக இருந்தது, 'நமது எம்.ஜி.ஆர்'.இந்த நாளிதழின் நிர்வாகம், சசிகலாவின் உறவினர்களிடம் உள்ளது. ஆகவே, அதில் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிகளை விமர்சித்தே செய்திகள் வெளியாகின. அணிகள் இணைந்து, இரட்டை இலையும் கிடைத்தபின்னர், எடப்பாடி, பன்னீர்செல்வம் அணியே அதிகாரபூர்வ அ.தி.மு.க என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.ஆகவே, அந்த அணிக்கென தனி நாளிதழ் தொடங்க முடிவுசெய்யப்பட்டிருந்தது. 'நமது அம்மா' என நாளிதழுக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்நாளிதழ், ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதேபோல, ஜெயா டி.வி-க்கு போட்டியாக, தொலைக்காட்சி  தொடங்கவும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அணியினர் திட்டமிட்டுள்ளனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");