[ad_1]
காரில் ரத்தக்கறை படியும் என்று சாலையில் அடிபட்டுக்கிடந்த மாணவர்களை போலீஸார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதைத் தவிர்த்த கொடூரச் சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சோட்டியா விகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் அர்பித் குரானா, சன்னி குப்தா. இவர்கள் இருவரும் அருகே உள்ள பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படித்துவந்தனர். சம்பவத்தன்று இவர்கள், பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வரும் வழியில் பைக் ஒரு மின்கம்பத்தில் மோதியது. அதில் தூக்கிவீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரும் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடப்பதை, அர்பித்துக்குத் தெரிந்தவர் பார்த்துள்ளார். பதறிப்போன அவர், உடனே அவசர எண்100ஐ தொடர்புகொண்டு, போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். போலீஸார், ஒரு இன்னோவா வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த நபர், மாணவர்களை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லுமாறு போலீஸாரிடம் வலியுறுத்தினார். காரில் ரத்தக்கறை படியும் என்று சொல்லி, போலீஸார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகும் போலீஸார் மனமிரங்கவில்லை. முடிவில், அந்த மாணவர்கள் சாலையிலேயே உயிரிழந்தனர்.
போலீஸார், மாணவர்களை மருத்துவமனைக்கு காரில் அழைத்துச்செல்ல மறுத்த காட்சி, சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.அது வெளியாகி, பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது. சம்பந்தப்பட்ட போலீஸார்மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து 3 போலீஸாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
'காரில் ரத்தக்கறை படியும்' - போலீஸ்காரர்களின் குரூர புத்தியால் பறிபோன இரண்டு உயிர்கள்
TAGS :
COMMENTS