[ad_1]
கால்பந்து போட்டிகளை மைதானத்தில் கண்டுகளிக்க சவுதி அரேபிய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. அங்கு மன்னராட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில விளையாட்டுகளைப் பெண்கள் விளையாடக்கூடாது, விளையாட்டில் பங்கேற்கும் பெண்கள் குட்டைப் பாவாடை அணியக்கூடாது எனப் பல விதிகள் உள்ளன. கொஞ்ச காலத்திற்கு முன்புவரை பெண்கள் கார் ஓட்டவே தடை இருந்தது. சமீபத்தில் தான் இதற்கு சவுதி அரேபியா அனுமதியளித்தது.இப்போது சவுதி அரேபிய அரசு மெல்ல நவீனத்துவத்துக்கு முகம் கொடுத்து வருகிறது. பழமைவாதக் கருத்துகளுக்கு விடைகொடுத்து சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், முதன் முறையாக சவுதி அரேபியப் பெண்கள் கால்பந்து போட்டியை மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரிலுள்ள கால்பந்து மைதானம் முதன்முதலாக இந்த அனுமதியை அளித்திருக்கிறது. இன்று இந்த மைதானத்தில் நடைபெறும் உள்ளூர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியை பெண்களும் கண்டு ரசிக்கவிருக்கிறார்கள். அதேசமயம், மைதானத்தில் பெண்கள் அமர்வதற்கு தனிக் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கென கழிவறைகள், வாகன நிறுத்துமிடம் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நாளை தலைநகர் ரியாத்தில் நடைபெறும் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்கும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கால்பந்து போட்டிகளை மைதானத்தில் கண்டு ரசிக்க பெண்களுக்கு வாய்ப்பு! சவுதியில் அடுத்த மறுமலர்ச்சி
TAGS :
COMMENTS