[ad_1]
Kancheepuram: இந்தியாவில் உள்ள தொன்மையான சின்னங்கள், மத்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாத்து வரும் தொல்லியல்துறை, அவற்றைப் பார்ப்பதற்கு நுழைவுக்கட்டணம் வசூல்செய்துவருகிறது. இந்த நிலையில், பார்வையாளர்களின் நுழைவுக்கட்டணத்ந்த் தொல்லியல்துறை உயர்த்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள பாரம்பர்ய நினைவுச்சின்னங்கள், உலக அளவில் பிரசித்திபெற்றவை. இவற்றைக் காண்பதற்காகவே வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் இந்தியா வருகின்றனர். மத்திய கலாசாரத்துறையின் கீழ் செயல்படும் தொல்லியல்துறை, 1996-ம் ஆண்டு முதல் பார்வையாளர்களிடமிருந்து நுழைவுக்கட்டணம் வசூல்செய்துவருகிறது. தமிழகத்தில் மாமல்லபுரம், செஞ்சி, திண்டுக்கல், சித்தன்னவாசலில் உள்ள நினைவுச் சின்னங்களைக் காண்பதற்கு, பார்வையாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.மாமல்லபுரம் தொல்லியல் துறையின் நினைவுச்சின்னங்களைப் பார்ப்பதற்கு, இந்திய நபருக்கு 10 ரூபாயும், வெளிநாட்டு நபர் ஒருவருக்கு 250 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங்களில், இந்தியருக்கு 5 ரூபாயும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு 100 ரூபாயும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. 2016-ம் ஆண்டு முதல் மாமல்லபுரத்தில் இந்தியருக்கு 30 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 500 ரூபாயும் உயர்த்தப்பட்டது. மற்ற இடங்களில் முறையே 15 ரூபாய், 500 ரூபாய் என உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் மாமல்லபுரத்தில் இந்தியருக்கு பணமாக செலுத்த நபர் ஒருவருக்கு 40 ரூபாயும், வங்கி அட்டை மூலமாகச் செலுத்தினால் 35 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பணமாகச் செலுத்த 600 ரூபாயும், வங்கி அட்டை மூலம் செலுத்தினால் 550 ரூபாய் எனவும் உயர்த்தி நிர்ணயம்செய்துள்ளனர். கட்டண உயர்வுகுறித்து, 60 நாள்களுக்குள் சுற்றுலாப்பயணிகள் தங்கள் கருத்தை தலைமையகத்துக்குத் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப்பயணிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நினைவுச் சின்னங்களைப் பார்வையிட கட்டணம் அதிரடி உயர்வு! சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி
TAGS :
COMMENTS