[ad_1]
"எடப்பாடி, ஓ.பி.எஸ், கமல், ரஜினி யாரும் நமக்கு போட்டி அல்ல, தினகரன்தான் நமக்கு போட்டி. அவர், பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறார்" என்று தி.மு.க எம்.எல்.ஏ., மூர்த்தி பேசியுள்ளது தி.மு.க-வுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் இன்று நடந்த தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தில், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தி பேசும்போது, "எடப்பாடி, ஓ.பி.எஸ், ரஜினியோ, கமலோ தி.மு.க-வுக்கு சவால் இல்லை. டி.டி.வி. தினகரன் மட்டும்தான் பெரிய சவால். டி.டி.வி.தினகரன் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்துவருகிறார். ஆர்.கே.நகரில் அவரது களப்பணி சிறப்பாக இருந்தது. அதை நான் நேரில் பார்த்தேன். தி.மு.க-வையும் அதற்கு ஏற்றார்ப்போல வலுப்படுத்த வேண்டும்; மாற்ற வேண்டும். நம் செயல் தலைவர் தளபதியைச் சுற்றி உள்ள சிலர்தான் ஜால்ரா போட்டு, தப்பான தகவல்களைக் கூறி அவரைக் கெடுக்கின்றனர்" என்று பேசியுள்ளார்.இது, கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை, கட்சியினர் சிலர் சரியாகப் பேசியுள்ளார் என்று ஆதரித்தாலும், கட்சிக்குள் கலகத்தை உண்டாக்கும் வகையிலும், மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல பேசியிருப்பதாகவும், மூர்த்தி அழகிரியிடமிருந்து வந்தவர். அதனால், அவர் பேசுவதுபோல இவரும் பேசுகிறார் என்று கூறுகிறார்கள். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`தளபதியைக் கெடுப்பது இந்த ஜால்ராக்கள்தான்' - கூட்டத்தில் தி.மு.க-வினரைப் பதறவைத்த எம்.எல்.ஏ
TAGS :
COMMENTS