[ad_1]

“அனைத்து அரசுப் பள்ளிகளும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல்மயமாக்கப்படும்" என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 

மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர், “மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து, பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த நவீன வகுப்பறைகளாக மாற்றியமைக்கப்படும். முதல் கட்டமாக, ஐந்து ஆண்டுகளுக்குள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் டிஜிட்டல் போர்டு நிறுவப்படும். இந்தத் திட்டத்தை மத்திய அரசு, மாநில அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூகநிதிப் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்” என்றார். 


மத்திய கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், ‘மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு, பள்ளியின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்ய, பயோ மெட்ரிக் முறை கொண்டுவர ஆலோசனை நடைபெற்றது.



‘பள்ளியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக, மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடைகள், பாடப் புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவை தொடர்ந்து வழங்கப்படும். அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான குடிநீர் வசதியும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படும். மாணவர்களின் கற்றல் முறையை எளிமைப்படுத்தவும், செயல்முறைக் கல்வியை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 9-ம் வகுப்பில் அறிமுகப்படுத்தப்படும் தொழில்சார் கல்வி முறை, இனி ஆரம்பப் பள்ளி வகுப்பிலேயே அறிமுகப்படுத்தப்படும்’ என, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

முக்கிய அறிவிப்பாக, ‘அனைத்துப் பள்ளிகளிலும் பாலர் பள்ளி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இடைநிற்றலைக் குறைக்க அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் விரைவில் ஆதார் கார்டு வழங்கப்படும்’ என அறிவித்திருக்கிறது மத்திய கல்வி ஆலோசனைக் குழு.

இந்தக் கூட்டத்தில், மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்யவும் செயல்படுத்தவும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஐந்தாம் வகுப்பிலும், எட்டாம் வகுப்பிலும் கட்டாயத் தேர்ச்சி பெறுகிறவர்களே அடுத்த வகுப்புக்குச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்படும். அந்த இரண்டு வாய்ப்புகளிலும் தேர்ச்சி பெறாதவர்கள், மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும். இவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி கற்பிக்க வேண்டும். இதுகுறித்து, மாநில அரசுகளின் ஆலோசனை கேட்கவும் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.



செயல்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளிக்கும் தரவரிசை நிர்ணயிக்கப்படும். ஆரம்பப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளில் கட்டாயக் கல்விச் சட்டத்தை விரிவுபடுத்தவும், பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கான தீர்வுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

‘ஆசிரியர்களின் திறனைக் கண்காணிக்கவும், பயோ மெட்ரிக் முறையில் வருகைப்பதிவை முறைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து ஆசிரியர்களும் ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளியில் வேலைபார்க்க வேண்டியது அவசியம்' என்கிறது மத்திய கல்வி ஆலோசனைக் குழு.



‘எவ்வளவு பேர் பள்ளியிலிருந்து இடையில் நின்றார்கள், பள்ளியில் சேரா குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது குறித்து செப்டம்பர் மாதத்தில் சர்வே எடுக்கப்படும். ஏழ்மை, சிறார் தொழிலாளராக மாற்றப்படுவது, சிறு வயதிலேயே திருமணம் போன்றவையே இடைநிற்றலுக்கான முக்கியக் காரணங்கள். 2014-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வேயில், பள்ளி இடைநிற்றலுக்கு ஆளான மாணவர்கள் 23.76 சதவிகிதம் பேர் `பொருளாதார காரணத்தால்தான் பள்ளியில் தொடர்ந்து படிக்க முடியவில்லை' எனச் சொல்லியுள்ளனர். 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் தகவல்படி, 69.5 லட்சம் மாணவர்களும், 51.6 லட்சம் மாணவிகளும் சட்டபூர்வமான வயதுக்கு முன்னரே கட்டாயத் திருமணம் புரிந்துள்ளனர். இவற்றையெல்லாம் முழுமையாகத் தடுத்து, ஆரம்பக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது மத்திய கல்வி ஆலோசனைக் குழு. 


விரைவில், ஸ்மார்ட் போர்டு, எல்.சி.டி ஸ்க்ரீன், ஆடியோ-விஷுவல், டிஜிட்டல் கற்றல்முறை என அரசுப் பள்ளி ஜொலிக்கும். ஆனால், மாணவர்களின் எண்ணிக்கையைத் தக்கவைக்க அரசு என்ன செய்யப்போகிறது?
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");