[ad_1]





Chennai: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 




ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாகத் தமிழக அரசுடன் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இந்திய மக்கள் மன்றத்தின் சார்பாக வழக்கறிஞர் வாராகி என்பவர், வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், `வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம். ஏற்கெனவே ஆம்புலன்ஸ் டிரைவர்கள், செவிலியர்கள் போராட்டத்தின்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும்' என்று உத்தரவிட்டனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");