[ad_1]





தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலுள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். 




தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளாக வருமான வரித்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்திவருகின்றனர். பெரும் தொழிலதிபர்கள் நிறுவனங்களிலும், அரசியல்வாதிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகின்றன. தற்போது சென்னை தியாகராயநகரிலுள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். அதேப்போல  கோவையிலும் ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடையில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.



 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நகைக் கடையில் சோதனை நடத்தி வருகிறனர். அதேப்போன்று, நாகர்கோவில், தஞ்சாவூர், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");