[ad_1]
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜபுத்ர ராணி பத்மாவதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ராணி பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
பத்மாவதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது முதலே எதிர்ப்புகள் வந்து சேர்ந்தன. இந்தப் படம் தங்கள் உணர்வைப் புண்படுத்துவதாக ராஜபுத்ர சமூக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நடிகை தீபிகா படுகோன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதையடுத்து இந்தப்படம் நாடு முழுவதும் விவாதப்பொருளானது.போராட்டங்களைத் தொடர்ந்து, பத்மாவதி படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. படத்தை மீண்டும் பார்த்த தணிக்கை அதிகாரிகள் சில மாற்றங்கள் செய்ய வலியுறுத்தியதோடு, படத்தின் பெயரை பத்மாவத் என்று மாற்றுமாறு பரிந்துரைத்தனர். இதையடுத்து படத்தின் பெயர் பத்மாவத் என்று மாற்றப்பட்டது.ஆனால், பெயர் மாற்றியும் படத்துக்குச் சிக்கல் தொடர்கிறது. குஜராத் மாநிலத்தில் இந்தப் படம் திரையிடப்படாது என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார். இது போன்ற நிலைப்பாட்டை வேறுசில மாநிலங்களும் எடுக்கக் கூடும் என்று தெரிகிறது. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பெயர் மாற்றிய பிறகும் `பத்மாவதி'யைத் துரத்தும் சிக்கல்!
TAGS :
COMMENTS