[ad_1]





அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, இன்று காவேரிபட்டினத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, சசிகலாவின் கணவர் நடராசன் நேற்று கழகத்தின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகழைச் சிதைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதை நடராசன் நிறுத்த வேண்டும் எனத் தொண்டர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறேன். 




ஜெயலலிதா ஆட்சியில் செய்த சாதனைகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக நடராசன் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களைத் தான்தான் தயார்செய்து கொடுத்ததுபோல நடராசன் பேசியுள்ளார். இதனால், எதிர் வினைகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கின்றேன். மன்னார்குடி குடும்ப ரகசியத்தை வெளியிட்ட கிருஷ்ணபிரியாவின் கன்னத்தில் அறைவேன் என நடராசன் கூறியுள்ளார். ஒன்றரை கோடி தொண்டர்களின் மனதைப் புண்படும்படி ஜெயலலிதாவை கொச்சைப்படுத்திய நடராசனை எதால் அடிப்பது. உலகம் முழுவதும் சுற்றியதாகக் கூறும் நடராசன், ஒரு சாதாரண பி.ஆர்.ஒ-வாக இருந்தவர். நடராசன் உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஏது பணம்? எல்லாம் ஜெயலலிதாவை ஏமாற்றிப் பறித்தது. 

நடராசன் ஒரு கிரிமினல் என எம்.ஜி.ஆரால் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவர். அ.தி.மு.க-வின் கொடியுடன் எங்கும் நடராசன் செல்ல முடியாது. தடுத்து நிறுத்திவிடுவோம். தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை முறையாகப் பெறுவதற்குத்தான் மத்திய அரசுடன் அமைச்சர்கள் பேசிவருகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காகவே இணக்கமாகச் செயல்படுகிறோம். தமிழகத்தை வழி நடத்த எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக்கொடுத்துள்ளார். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் வந்தால்தான் வளர்ச்சி பெறுமா? பொருளாதார வளர்ச்சியில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழ்நாடு உள்ளது. இது பொருளாதார மேதை எனக் கூறும் ஆடிட்டர் குருமூர்த்திக்குத் தெரியாதா? 


தேர்தல் தோல்வி ஏற்படும்போது ஒரு சஞ்சலம் ஏற்படும். அந்த அடிப்படையில் மதுசூதனன் கடிதம் எழுதினார். ஆனால், அனைவரும் ஆர்.கே.நகர் தேர்தலில் தங்களது பணிகளை சிறப்பாகச் செய்தனர். அதனால் பிரச்னை ஏதும் இல்லை. இரட்டை இலைக்கும் தினகரன் மற்றும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் தனிக்கட்சி தொடங்கினால் கவலை இல்லை. அவர்கள், அ.தி.மு.க-வின் இரட்டை இல்லை சின்னத்தையும் அ.தி.மு.க அலுவலகத்தையும், கொடியையும் பயன்படுத்த முடியாது'' என்று கூறினார்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");