[ad_1]
உலகத்தரம் வாய்ந்த ரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மக்களுக்கு அதிக வருமானம் ரப்பர் மூலம் கிடைத்ததால் கன்னியாகுமரியின் மேற்குப் பகுதிகளில் அதிகபடியான ரப்பர் சாகுபடி செய்யப்பட்டது. ரப்பர் மரங்களுக்கு டிசம்பர், ஜனவரி மாதங்கள் இலையுதிர் காலமாகும் .இந்தச் சமயங்களில் ரப்பர் பால் வெட்டு தொழிலை நிறுத்தி விடுவார்கள் .
அப்போது ரப்பர் மரங்களில் பால் வடித்த இடங்களில் மீண்டும் பட்டை வேகமாக நிரம்பும். படியும் தோல் பாதிக்கப்படாமல் இருக்க கறுப்புத் தார் பூசுவதும் வழக்கம். மீண்டும் ரப்பர் மரங்களில் இளந்தளிர்கள் உருவாகி அவை இலைகளாக வளரும் நிலையில் மழை பெய்யும். அப்போது ரப்பர் விவசாயிகள் மீண்டும் பால் வெட்டு தொழிலைத் தொடங்குவார்கள்.கடந்த மாதம் முதல் ரப்பர் மரங்களில் இலைகள் உதிரத் தொடங்கிவிட்டன. ஒகி புயலும் ரப்பர் மரங்களைச் சேதப்படுத்தி சிதைத்துச் சென்றுவிட்டது. அதனால் ரப்பர் விவசாயிகள் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள். இந்த மாத கடைசிக்குள் ரப்பர் பால் வெட்டும் தொழிலை அனைவரும் நிறுத்திவிடுவார்கள். இதனால் பிப்ரவரி மாதம் முதல் ரப்பர் தொழிலாளர்கள் வேலை இன்றி காணப்படும் சூழல் உருவாகும். தற்போது ஒகி புயலுக்குப் பின் ரப்பரின் விலை கிலோ 100-க்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்ததால் ரப்பர் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
குமரி ரப்பர் விவசாயிகளை கண்ணீரில் தள்ளிய ஒகி புயல்!
TAGS :
COMMENTS