[ad_1]

Pudukottai: 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில், இந்த வருடத்தின் முதல் ஜல்லிக்கட்டு திருவிழா இப்போது நடைபெற்றுவருகிறது. 451 காளைகள்,101 மாடுபிடி வீரர்கள், 5000 பார்வையாளர்களோடு படுஉற்சாகமாக நடந்துவரும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மக்கள் நல்லவாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்று காலையில் தொடக்கிவைத்தார்.கடந்த  ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, அதற்கான அனுமதியை அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று வாங்கியபோதும், முதல் ஜல்லிக்கட்டு இதே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் நடந்தது. ராபூசல் என்ற கிராமத்தில் நடந்த அந்த முதல் போட்டியையும் அமைச்சர் விஜயபாஸ்கர்தான் தொடங்கிவைத்தார். பொதுவாக, தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டு அதிகமாக நடத்தும் மாவட்டம் என்ற பெருமை புதுக்கோட்டைக்குத்தான் உண்டு. ஆனால் ஜல்லிக்கட்டு என்றாலே, அலங்காநல்லூர், பாலமேடு என்றாகிவிட்டது. அந்தப் பெருமையை இந்த ஆண்டு தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் இறங்கிவிட்டார்கள் தச்சங்குறிச்சியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர். 10 நாள்களுக்கு முன்னதாகவே போஸ்டர்கள் ஒட்டி விட்டார்கள். இன்று நாளிதழ்கள், லோக்கல் டி.வி-களில் விளம்பரம் செய்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைக்க இதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரையும் அழைத்துவிட்டார்கள். எதிர்பார்த்தபடியே ஊடகங்களின் கவனத்தை தற்போது நடந்துவரும் தச்சங்குறிச்சி மாடுபிடி விழா ஈர்த்துவிட்டது.




'தொன்போஸ்கோ இளைஞர்கள் நற்பணி மன்றத்தி'னர் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமையாக மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் ஈடுபட்டுவருகின்றனர்.


அந்த மன்றத்தின் பொறுப்பாளர்கள் பேசும்போது,"தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதும் போட்டிகளை நடத்துவதும் புதுக்கோட்டை மாவட்டம்தான். எங்கள் மாவட்டம் தவிர, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டுகளிலும் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த காளைகள் அதிக அளவில் கலந்துகொள்ளும். பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, நமது வீர விளையாட்டை முடக்க நினைத்ததும், அது சார்ந்த புரட்சி தமிழ்நாட்டில் கடந்த  ஆண்டு எழுந்தபோதுதான், இந்த மாவட்டத்தின் அடையாளமாக, 'ஜல்லிக்கட்டுனா...  புதுக்கோட்டை மாவட்டம்தான் 'என்கிற பெருமை அவ்வளவாக வெளியுலகத்துக்குத் தெரியாத நிலை இருப்பதை மாற்ற நினைத்தோம். இந்த விழா, ஒவ்வோர் ஆண்டும் நடப்பதுதான். ஆனால், இந்த வருடம்தான் ஊடகங்கள் முதன்முறையாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், இனி வரும் ஆண்டுகளிலும் தக்கவைத்துக்கொள்ளுவோம்" என்றார்கள்.காலையில் ஆரம்பித்து நடந்துவரும் இந்த ஜல்லிக்கட்டில், இதுவரை உயிர்பலி நடக்காதது ஆறுதலான விஷயமாக தச்சங்குறிச்சி மக்கள் நினைக்கிறார்கள். "இந்த  ஆண்டு நடக்குற முதல் ஜல்லிக்கட்டுப்பா இது. மாடுபிடி வீரர்களுக்கு காயம், சிராய்ப்பு ஏற்படுவது சகஜம். அதை தவிர்க்க முடியாது. ஆனால், உயிர்பலி ஏற்படுவதை மாடுபிடி வீரர்களின் சுதாரிப்பால் தடுக்கமுடியும். அந்த வகையில், எங்கள் மாடுபிடி வீரர்கள் எச்சரிக்கையாக நடந்துகொண்டார்கள். புதுவருடத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் இத்தனை பேர் பலி என்ற அவப்பெயர் எங்கள் ஊருக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்"என்றனர்.உற்சாகமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திவிட்டுப் பெருமைபொங்க மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது, புதுக்கோட்டை மாவட்டம்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");