[ad_1]
பிரிக்க முடியாதது எது? லாலுவும் பசு மாடும். அந்தளவுக்கு பசு மாடுகள் மீது லாலு அலாதி பிரியம் கொண்டவர். வீட்டிலும் ஏராளமான பசுமாடுகளை வளர்த்தார். அவற்றுக்கு அவரே தீவனம் வைப்பார், குளிப்பாட்டுவார் , பால் கறப்பார். அப்படியே போட்டோவுக்கும் போஸ் கொடுப்பார். லாலுவின் வாழ்க்கை பசுக்களோடு பின்னி பிணைந்தது. லாலு பற்றி கார்ட்டூன் வந்தால் பின்னணியில் பசுமாடு ஒன்று கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இல்லையென்றால், அந்த கார்ட்டூன் முற்று பெறாது.
லாலுவின் பசுநேசம் அந்தளவுக்கு வடநாட்டில் பிரபலம். பாரதிய ஜனதா கட்சிக்கு முன்னரே பசுக்கள் மது அலாதி பிரியம் காட்டியவர் லாலு. அப்படிப்பட்ட லாலு, மாட்டுத்தீவன ஊழலில் சிக்கிற, சிறை சென்றதுதான் சோகத்திலும் சோகம். ரூ.950 கோடி மாட்டுத்தீவன ஊழலில் சாய்பாஷா கருவூலத்தில் இருந்து 37.7 கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். தற்போது, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ. 89.27 லட்சத்தை கையாடல் செய்த வழக்கில் மூ்னறரை ஆ்ணடுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 வழக்குகள் எஞ்சியுள்ளன.
சாய்பாஷா கருவூலத்தில் இருந்து 33.61 கோடி ரூபாய், தும்கா கருவூலத்தில் இருந்து 3.31 கோடி ரூபாய், தோராண்டா கருவூலத்தில் இருந்து 139.39 கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில், இரு வழக்குகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. இந்த மாத இறுதிக்குள் இரு வழக்குகளின் தீர்ப்புகள் வெளிவரவிருக்கின்றன. அதிலும், தண்டனை கிடைக்கும்பட்சத்தில் லாலுவின் வாழ்க்கை கிட்டத்தட்ட சிறைக்குள்ளேயே முடிந்துவிடும் என்றே சொல்லப்படுகிறது.
இதில், தும்கா கருவூலத்தில் இருந்து 3.31 கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சிவபால் சிங்தான் விசாரணை அதிகாரி. இவர்தான் லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தவர். கடுமையான நீதிபதியான இவரிடம் லாலுவின் சித்து வேலை பலிக்கவில்லை. 'உங்களுக்காக பரிந்துரைத்து எனக்கு ஏராளமான போன் அழைப்புகள் வந்தன' என்று விசாரணையின் போது, லாலுவிடம் நீதிபதி சிவபால் சிங் கடுமை காட்டியதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதும் 'பாரதிய ஜனதா அரசிடம் மண்டியிடுவதைக் காட்டிலும் சிறையில் செத்துப் போவதே மேல் ' என்று லாலு கூறியிருந்தார். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் லாவுக்கு அதுதான் விதி என்பது மட்டுமல்ல ஊழலில் திளைக்கும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ஒரு பாடம்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
பரிதாப நிலையில் லாலு என்ற பசுநேசனின் சிறை வாழ்க்கை!
TAGS :
COMMENTS