[ad_1]





"எந்த சிஸ்டம் சரியில்லை என ரஜியனிக்கு சொல்லத் தெரியவில்லை. அர்த்தம் தெரியாதவர்கள் அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார்கள்" என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். 




 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் "மனிதநேய உதவும் கரங்கள் அமைப்பு" சார்பில் நடந்த புத்தாண்டு விழா மற்றும் மும்மத கூட்டுப்பிரார்த்தனை விழாவில் கலந்த கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, "சிறப்பாக செயல்பட்டு வரும் அ.தி.மு.க ஆட்சி கலைந்துவிடும் என பல கட்சியினர் கூறி வந்தார்கள். ஆனால், இந்த ஆட்சி கலையாமல் தொடர்ந்து சிறப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. இனியும் தொடர்ந்து அ.தி.மு.க ஆட்சி மட்டுமே நடக்கும்.  "சிஸ்டம் சரியில்லை" என கூறிவரும் நடிகர் ரஜினிகாந்த், எந்த சிஸ்டம் சரியில்லை என சொல்லிய ரஜினியால், எந்த சிஸ்டம் சரியில்லை என சொல்லத் தெரியவில்லை. முதலமைச்சரும் இதைப் பற்றித்தான் கேள்வி எழுப்பினார். சிஸ்டம் சரியில்லை என்பதில்,  சிஸ்டம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ரஜினி அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார். எம்.ஜி.ஆர் போல வர வேண்டும் என நினைத்து பலர் திரைப்படத்துறையில் காணாமல் போயுள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேசம், புலியைப் பார்த்து பூனை சூடு போட்டது போல ஆகிவிடும். தமிழ்நாடு திராவிடர்களின் மண். திராவிடக் கட்சிகள் மட்டுமே இங்கு ஆட்சி செய்யும். இதில் மற்ற அமைப்புகளுக்கு வேலை இல்லை" என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");