[ad_1]

`பத்மாவத்' படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தீபிகா படுகோனே மும்பையிலுள்ள சித்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார்.



சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் பத்மாவத். இந்தப் படத்தில், பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். வரலாற்றுப் பின்னணியைக்கொண்டு இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜபுத்திர சமூக மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். அதையடுத்து, படம் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் படம் ரிலீஸ்க்குத் தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, உச்ச நீதிமன்றம் பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதையடுத்து, தற்போது, டிசம்பர் 25-ம் தேதி படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில், மும்பையிலுள்ள பிரசித்திபெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்குச் சென்று தீபிகா படுகோனே தரிசனம் செய்தார். அவரின் வருகையொட்டி, பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், சித்தி விநாயகரை தீபிகா படுகோனே தரிசித்துச் சென்றார்.