[ad_1]
ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது? அழகுத் தமிழால் அரங்கப்பெருமானை ஆண்டதால் 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார் பூமிப்பிராட்டி. அவர் பிறந்தபோது, 'கோதை' என்றே பெரியாழ்வாரால் திருநாமம் சூட்டப்பட்டது. ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் சூட்டப்பட்டது என கோதாஸ்துதி என்ற நூலில் வேதாந்த தேசிகர் விளக்கியுள்ளார். 29 ஸ்லோகங்களைக்கொண்ட இந்த நூலில், ஆண்டாளின் அருமை பெருமைகளை விளக்கியுள்ளார் வேதாந்த தேசிகர்.
ராவணனால் தூக்கிச் செல்லப்படும்போது, அன்னை சீதாதேவி தனது அணிகலன்களையெல்லாம் எறிந்து, 'மலைகளே, நதிகளே, எனது கணவர் ஸ்ரீராமச்சந்திரப் பிரபுவிடம் என் நிலையைச் சொல்லுங்கள்' என்று வேண்டினாள். ஸ்ரீராமர் கோதாவரி ஆற்றை அடைந்து நீராடியபோது, ராவணனுக்கு அஞ்சி சீதாதேவியைப் பற்றி சொல்லாமல் இருந்துவிட்டாள் கோதாவரி. இதனால், கோதாவரி நதிக்கு பாவம் சேர்ந்தது.
பூமிப்பிராட்டி பிறந்து, அவருக்கு 'கோதை' என்ற பெயர் சூட்டப்பட்டபோதுதான், கோதாவரி தனது பாவத்தைப் போக்கிக்கொண்டாள் என அந்த நூல் தெரிவிக்கிறது. கோதாவரிக்கு, 'கோதை' என்ற பெயரும் உண்டு. ஆண்டாள் நாச்சியார், தான் பிறந்தபோதே கோதாவரியின் பாவத்தை நீக்கி, அவளுக்கு மங்களம் அருளினார். ஆண்டாளின் வாழ்வும், பாடல்களும் இன்றும் என்றும் நமக்கு மங்களத்தையே தரும் என்பது உண்மை. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஆண்டாளுக்கு ஏன் 'கோதை' என்ற பெயர் உண்டானது?
TAGS :
COMMENTS