[ad_1]
ஜெயலலிதா மரணமடைந்த தேதி தொடர்பாக தவறான கருத்துகள் பரப்பப்படுவது துரதிருஷ்டமானது என்று அப்போலா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டார். அப்போலோ நிர்வாகம் வேண்டுகோளின்படியே டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட்டது என்று சசிகலா உறவினர் திவாகரன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் தமிழக சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கமளித்து அப்போலோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஜெயலலிதா மரணம் அடைந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி குறித்து தேவையில்லாமல் தவறான செய்திகள் பரப்புவது துரதிருஷ்டவசமானது.
சிகிச்சையின்போது மருத்துவ நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டது. எதிர்பாராத மரணம் குறித்த அறிவிப்பு சரியான மருத்துவ நடைமுறைகளின்படி அறிவிக்கப்பட்டது. நடந்தச் சம்பவங்களுக்கு எதிரான திரிபு என்பது ஜெயலலிதா மீது அக்கறை செலுத்தியவர்களுக்கும், ஓய்வில்லாமல் சிகிச்சையளித்த இந்திய மற்றும் உலக அளவிலான மருத்துவர்களுக்கு எதிரானதாகும்.
மேலும், ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணங்கள் குறித்து தகுதியான அமைப்பின் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உண்மை மற்றும் நீதி வெளிவர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஜெயலலிதா இறந்தது எப்போது? அப்போலோ நிர்வாகம் விளக்கம்
TAGS :
COMMENTS