[ad_1]
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சூரியனிலுள்ள சூப்பர்ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் 13-ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தை விராட் கோலியும் பாண்டியாவும் தொடர்ந்தனர். 15 ரன்களில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தநிலையில் மறுமுனையில் நிதானமாக ஆடிய கோலி 153 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும் மற்ற ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணி 307 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் மோர்ன் மோர்கெல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரமும் டீன் எல்கரும் களமிறங்கினர். மார்க்ரம் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, ஆம்லா களமிறங்கினார். அவரும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனைத்தொடர்ந்து டி வில்லியர்ஸ் களமிறங்கினார். டி வில்லியர்ஸூம், எல்கரும் நிதானமாக ஆட, தென் ஆப்பிரிக்கா மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்களை எடுத்திருந்தது. எல்கர் 36 ரன்களுடனும் டி வில்லியர்ஸ் 50 ரன்களுடனும் களத்திலுள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
சதம் விளாசிய விராட் கோலி..! சரிவிலிருந்து மீண்ட இந்தியா
TAGS :
COMMENTS