[ad_1]
இந்தியா முழுவதும் இன்று மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். சித்தா, ஆயுர்வேதம் படித்த மருத்துவர்கள் ஆறு மாத பயிற்சிக்குப் பிறகு அலோபதி மருத்துவராகப் பணியாற்றலாம் என்பது உட்பட, பல புதிய விதிகளைக்கொண்ட புதிய தேசிய மருத்துவ கவுன்சிலை அமைக்க மசோதா கொண்டுவந்துள்ள மத்திய அரசை எதிர்த்து, இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தமிழகத்திலுள்ள இந்திய மருத்துவ சங்கத்தினரும், மற்ற அலோபதி மருத்துவர்களும் இன்று ஒருநாள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய மசோதாவைத் தயாரித்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில், மொத்தமுள்ள 21 உறுப்பினர்களில் 6 பேர் மட்டுமே மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதனால், மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க முடியாது. முறையான பயிற்சி இல்லாத சித்தா, ஆயுர்வேத மருத்துவர்கள், அலோபதி மருத்துவராக ஆகும் வகையில் இம்மசோதாவில் விதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, நவீன மருத்துவத்துறையைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு கோரிக்கைகளை வைத்து, மருத்துவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அரசு மருத்துவர்கள், ஒரு மணி நேரம் மட்டும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்கின்றனர். அவசர சிகிச்சைகளுக்கு விதி விலக்கு அளித்துள்ளனர். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
மத்திய அரசை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
TAGS :
COMMENTS