[ad_1]
Chennai:
அழகாக விரிக்கப்பட்டிருக்கும் தலைவாழை இலையில், கூட்டு, பொரியல், சாதம், ஸ்வீட், ஊறுகாய், உப்பு... இதனுடன் வெற்றிலை பாக்கு. நீங்கள் பசியோடு இருந்தால், நாவில் சப்புக்கொட்ட உடனே சாப்பிட அமர்ந்துவிடுவீர்கள். ஆனால், எறும்புகளுக்கே சாப்பிட முடியாத அளவு உணவே அது. கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கும் இவை அனைத்தும், க்ளேவால் செய்யப்பட்ட மினியேச்சர் படைப்புகள். இன்ஸ்டாகிராமில் அந்தப் படங்களைப் பார்த்ததும் ஆச்சர்யம். படைப்புகளில் அப்படியொரு நேர்த்தி. யாருப்பா இந்தக் கலைஞர்?
“என் பேரு ஷில்பா. சென்னைப் பொண்னு. சவுண்டு இஞ்ஜினீயரிங் படிச்சுட்டு அந்த ஃபீல்டு ரிலேட்டானா வேலைக்குப் போக இருந்தேன். ஆனால், விளையாட்டா ஆரம்பிச்ச க்ளே வொர்க் அதில் முழுசா இயங்க வெச்சுடுச்சு. ஒருநாள் பொழுதுபோக்கா க்ளேவில் பர்கர் செய்தேன். ரொம்ப அழகா இருந்தது. கிராஃப்ட் வொர்க் ரொம்ப அழகா பண்ணும் அன் அம்மாவுக்கு நான் செய்தது ரொம்ப புடிச்சுப்போய் பாராட்டினாங்க. தொடர்ந்து ஒண்ணு ஒண்ணா செய்ய ஆரம்பிச்சேன். பலரும் பாராட்டி உற்சாகப்படுத்த ஃபுல் டைமா மினியேச்சர் டிசைன் பண்ண ஆரம்பிச்சுட்டேன்'' என குஷியாகப் பேசுகிறார் ஷில்பா.
''எங்க வீட்டுல பல வருஷங்களா கொலு வைக்கிறோம். சின்ன வயசிலிருந்து அதைப் பார்த்து பழகினதால் நுணுக்கமான கலைகள்மீது ஆர்வம் வந்துச்சு. கொலு ஆரம்பிக்கிறதுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே வேலைகளை ஆரம்பிச்சுடுவோம். ஒவ்வொரு பொம்மையையும் பார்த்துப் பார்த்து வாங்குவோம். கடைகளில் வாங்கும் பொம்மைகள் தவிர, நாங்களே செய்த பொம்மைகளும் கொலுவை அலங்கரிக்கும். அதைப் பார்க்கிறவங்க பாராட்டும்போது கிடைக்கும் சந்தோஷம் எங்களுக்குக் கூடுதல் உத்வேகம். நான் மினியேச்சர் பண்ண ஆரம்பிச்சதும், குறிப்பாக எந்த விஷயத்தில் ஃபோகஸ் பண்ணலாம்னு யோசிச்சேன். உணவுப் பண்டங்கள்மீது ஆர்வம் வந்துச்சு. இட்லி, வடை, பிரியாணி, இடியாப்பம்னு விதவிதமா மினியேச்சர் செய்ய ஆரம்பிச்சேன். 2011-ம் வருஷத்திலிருந்து மினியேச்சர் டிசைன் செய்யறேன். ஆனாலும் இதன்மூலம் முதல் 5 வருஷம் வருமானம் இல்லை. வீட்டில் அப்பப்போ ரைடு விழும். 'சவுண்டு இஞ்ஜினீயரிங் படிப்புக்கு நல்ல வேகன்ட் இருக்கு. அதைவிட்டுட்டு இப்படி கஷ்டப்படணுமா?'னு பலரும் சொல்வாங்க. ஓர் இடத்துல அமைதியா உட்கார்ந்து தவம் மாரி ஒரு பொருளை வடிவமைக்கிறதில் கிடைக்கும் சந்தோஷம் வேற எதிலும் கிடைக்காதுங்க'' - என்கிற ஷில்பாவுக்கு பலம் சேர்ப்பது அவர் அம்மா உஷா.
“அம்மாவின் கலை ஈடுபாடுதான் நான் மினியேச்சரில் கவனம் செலுத்தினபோது சப்போர்ட்டா இருக்கவெச்சது. என் க்ளே உருவங்களுக்கு அவங்கதான் வண்ணம் கொடுப்பாங்க. உணவு சம்பந்தமான மினியேச்சர் பண்றது ரொம்பவே கஷ்டம். அதிலும் அரிசி பண்றது பெரிய வேலை. ஒவ்வொரு அரிசியையும் நுணுக்கமா செய்யணும். ஓர் இலை சாப்பாடு செட் செய்ய ஐந்து நாள் ஆகும். கடுகு, கறிவேப்பிலை, உப்பு எனப் பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். என் படைப்புகளைப் பார்க்கும் யாருமே இது க்ளேவில் பண்ணினதுனு அவ்வளவு சீக்கிரத்தில் ஒத்துக்கக் கூடாது. என் உழைப்புக்கு இப்போ நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. நல்ல விலை கொடுத்து வாங்கறாங்க. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கில் நல்ல வரவேற்பு. நம்ம ஊரில் மினியேச்சருக்கு வரவேற்பு குறைவுதான். வெளிநாடுகளில் பெரிய வரவேற்பு இருக்கு. அதிலும், நம் பாரம்பர்ய விஷயங்களை ரொம்பவே லைக் பண்றாங்க. அது என் உழைப்புக்கு நல்ல அங்கீகாரத்தைக் கொடுக்குது. இன்னும் கொடுக்கும்'' என நம்பிக்கையுடன் பேசுகிறார் ஷில்பா.
நம் பாரம்பர்ய தானிய வகைகளையும் க்ளேவில் செய்து அசத்த வேண்டும் என்பது ஷில்பாவின் இலக்கு. அரிசியை வடிவமைப்பது போல அதுவும் பெரிய சவால்தான். ஆனால், நிச்சயம் ஷில்பா அதைச் செய்து காட்டுவார் என்ற நம்பிக்கை அவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டது. மினியேச்சரில் அசத்தும் ஷில்பாவுக்கு மெகா சைஸில் ஒரு பூங்கொத்து! உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“ஓர் இலை சாப்பாடு செய்ய ஐந்துநாள் ஆகும்” - க்ளே மினியேச்சர் இன்ஜினீயர் ஷில்பா
TAGS :
COMMENTS