[ad_1]







சென்னை வேளச்சேரியில் தெருவில் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடமிருந்து செயின்பறிக்கத் திருடர்கள் முயன்றனர். காரில் வந்தவர்களின் உதவியால் அந்தக் கல்லூரி மாணவி, தப்பித்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 



 சென்னையில் நடந்து செல்லும் பெண்களிடம் பைக்கில் வந்து செயின்பறிப்பு சம்பவங்கள் நடப்பது தொடர்கதை. விமானத்தில் வந்து செயின் பறித்த வடமாநிலக் கொள்ளையர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர். ஆசிரியை வேலமிடம் பிரபல செயின்பறிப்பு கொள்ளையன் நீராவி முருகன், அரிவாளைக் காட்டி மிரட்டி செயின் பறித்த சம்பவம் சென்னை மக்களைப் பதற வைத்தது. இந்தநிலையில், சென்னை வேளச்சேரியில் கல்லூரி மாணவியிடம் கொள்ளையர்கள் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், சென்னை வேளச்சேரி, சீத்தாராம் நகரில் நேற்று (18.1.2018) மதியம் தனியாகக் கல்லூரி மாணவி நடந்து சென்றுள்ளார். அவரைப் பின்தொடர்ந்து பைக்கில் இருவர் வந்தனர். அவர்கள், மாணவியிடமிருந்த செல்போனைப் பறிக்க முயன்றனர். அப்போது, மாணவி, `திருடன் திருடன், காப்பாற்றுங்கள்' என்று சத்தமிட்டார். பதற்றத்தில் கொள்ளையன் கையில் செல்போன் சிக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் சென்ற பைக் கொள்ளையர்கள், திரும்ப அதே இடத்துக்கு வந்து மாணவியிடம் செயினைப் பறிக்க முயன்றனர். அப்போது அவ்வழியாகக் காரில் வந்தவர்கள், இந்தச் சம்பவத்தைப் பார்த்தனர். அவர்கள், காரிலிருந்து இறங்கி கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றனர். இதனால் கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அதை வைத்துக் கொள்ளையர்களைத் தேடி வருகிறோம்'' என்றனர்.  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");