[ad_1]
“என் உடம்பை ஃபிட்டா வெச்சுக்கத்தான் நான் யோகா கத்துக்கிட்டேன். அதுவே என் வாழ்க்கையாகும்னு நினைச்சுப் பார்க்கலை. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” - சிம்பிளாக பேச ஆரம்பிக்கிறார், பெங்களூரைச் சேர்ந்த நேஹா கோயல்.
சமீபத்தில், ஆயுர்வேத மற்றும் சித்தா மருத்துவம் மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட 'அயூஷ் அமைச்சகம்' நடத்திய யோகா தேர்வில் வெற்றிபெற்று, தென்கொரியா நாட்டின் யோகா நல்லெண்ண தூதராகி இருக்கிறார் இந்த யோகா டீச்சர்.
“என் சொந்த ஊர் கொல்கத்தா. பெற்றோர் அங்கேதான் இருக்காங்க. கொல்கத்தாவில் ஸ்கூலிங் முடிச்சேன். காலேஜ் படிப்பு பெங்களூரில். அதனால், என்னை எப்பவும் பெங்களூரு பெண்ணாகவே நினைக்கிறேன். 2012-ம் வருஷம் தனியார் வங்கி ஒன்றில், கார்ப்பரேட் டிரெயினராக வேலை பார்க்க ஆரம்பிச்சேன். டார்கெட், டெட் லைன்ஸ், ஸ்ட்ரெஸ் என ஓடிட்டிருந்துச்சு. அதைச் சவாலா செய்துட்டிருந்தாலும் ஒரே மாதிரி என் வாழ்க்கைப் போகுதேனு தோணும். என் அம்மாவும் அப்பாவும் ஏற்கெனவே யோகாவில் ஆர்வம் இருக்கிறவங்க. நானும் சின்ன வயசில் பண்ணியிருக்கேன். அதை மறுபடியும் தொடரலாமேனு நினைச்சேன். பெங்களூருல ‘ஆர்ட் ஆஃப் லிவிங்' என்கிற யோகா சென்டரில் சேர்ந்தேன். தினமும் ஒரு மணி நேரம் யோகா என மூணு வருஷம் தொடர்ந்தேன். மனசும் உடம்பும் புத்துணர்ச்சியா மாறினதை உணர்ந்தேன்” என்று யோகாவின் மீது ஏற்பட்ட ஆர்வதை விவரிக்கிறார் நேஹா.
``ஒரு கட்டத்துக்கு மேலே பரபரப்பான கார்ப்பரேட் வாழ்க்கையைவிட, சீரான வாழ்க்கை முறையைக் கற்பிக்கும் யோகா ரொம்பவே கவர்ந்தது. 2015-ம் ஆண்டு அதே யோகா சென்டரில் டீச்சர் டிரெய்னிங் முடிச்சேன். கார்ப்பரேட் வாழ்க்கைக்கு டாடா சொல்லிட்டு யோகா டீச்சர் ஆனேன். 'நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுட்டு, ஏன் யோகா கத்துக்கொடுக்கிறா?”, `இந்த வேலையெல்லாம் நிரந்தரம் இல்லே. யோசிக்காம முடிவெடுக்காதே’, எனப் பலரும் விமர்சனம் பண்ணினாங்க. கார்ப்பரேட் சம்பளம் கிடைக்கலைன்னாலும் எனக்கு இந்த வருமானமே போதுமான இருந்தது. தவிர, நமக்குத் தெரிஞ்ச நல்ல விஷயத்தை, மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்கும் மனநிறைவு கிடைக்குது” என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் நேஹா.
``சரி, அது என்ன தென்கொரியாவின் யோகா அரசுத் தூதர்? இப்படி ஒரு விஷயம் இருக்கிறதே இங்கே பலருக்கும் தெரியாதே'' என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே, “ஆமாங்க! அது உண்மைதான். நிறைய பேர் யோகாவை ஒரு ஃபிட்னஸாகவும் ஆன்மிகம் சார்ந்ததாகவும் பார்க்கிறாங்க. இதையே ஒரு கரியரா மாற்றலாம். அதுக்கு நானே ஓர் உதாரணம். 2015-ம் வருஷம் யோகா டீச்சர் டிரெயினிங் முடிச்ச கையோடு, எம்.எஸ்சி யோகா படிச்சு முடிச்சேன். அப்புறம், ‘தி இண்டியன் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் The Indian Council for Cultural Relations (ICCR) தேர்வு எழுதி செலக்ட் ஆனேன். நேர்காணலில் சமஸ்கிருதம், யோகா பற்றி நிறைய கேள்விகள் கேட்டாங்க. இப்படித்தான் நான் இந்தியா சார்பாக தென்கொரியாவின் யோகா நல்லெண்ணத் தூதரானேன். மனசையும் மூளையையும் கசக்கிப் பிழியும் கார்ப்பரேட் வாழ்க்கையைவிட, இரண்டையும் எப்போதும் உற்சாகமாக வெச்சிருக்கும் இந்த வாழ்க்கை ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு” என்று யோகாவை கரியராக மாற்றுவதற்கு சில வழிகளையும் கூறி பூரிக்கிறார் நேஹா. உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
“யோகாவை உங்க கரியரா மாத்தலாம்!” - தென் கொரியாவின் நல்லெண்ணத் தூதர் நேஹா கோயல்
TAGS :
COMMENTS