[ad_1]





டெல்லி பவானா தொழிற்சாலைப் பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். 





வடக்கு டெல்லியின் பவானா தொழிற்சாலைப் பகுதியில் பட்டாசுத் தொழிற்சாலை உள்ளது. இந்தப் பட்டாசுத் தொழிற்சாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசுத் தொழிற்சாலையில் தரைத் தளத்தில் பற்றிய தீ, அந்த கட்டடத்தில் இருந்த 2 தளங்களுக்கும் பரவியது. அப்போது பணியில் இருந்தவர்கள் வெளியில் வரமுடியாமல் மாட்டிக் கொண்டனர். ஒரு சிலர் மாடியிலிருந்து கீழே குதித்து சிறு காயங்களுடன் தப்பித்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 8 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமடைந்தனர். 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை போராடி அணைத்தன. 



இந்தநிலையில், அந்த பட்டாசுத் தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கிவந்தது விசாரணையில் தெரியவந்தது. பிளாஸ்டிக் உற்பத்திக்கென உரிமம் பெற்றுவிட்டு, அந்த தொழிற்சாலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. மேலும், சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டடத்தில், அவசர காலத்தில் வெளியேறும் வழி அமைக்கப்படாததால், ஒரு அறைக்குள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பட்டாசுத் தொழிற்சாலையில் உரிமையாளர் மனோஜ் ஜெயினை டெல்லிப் போலீஸார் கைது செய்தனர். 



  உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்




!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");